Showing posts with label sports. Show all posts
Showing posts with label sports. Show all posts

Tuesday, 15 September 2015

”ரஹானேவின் ஆட்ட நுட்பம் சச்சினை நினைவுப்படுத்துகிறது” - ஸ்டீவ் வாஹ்

By     No comments:


ரஹானே விளையாடும் விதம் எனக்கு சச்சினை நினைவூட்டுவதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ரஹானே எனக்கு பிடித்த வீரர். அதோடு தரமான வீரரும் கூட. அவர் எனக்கு சச்சினை கொஞ்சம் நினைவூட்டுவதாக உள்ளது. சச்சினை போன்று ’பேக் ஸ்விங்’ ஆட்டத்தை பெரிய அளவில் விளையாடவில்லை. ஆனால், சச்சினை தனது மாடலாக கொண்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

ரஹானேவின் நுட்பமான ஆட்டம் பிடித்திருக்கிறது. அவரிடம் ஒரு கச்சிதமான நுட்பம் இருக்கிறது. அவருடைய ஷாட்கள், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களுக்கும் பந்தை விரட்டிவிடுகிறது. ஒரு விளையாட்டு வீரராக ரஹானேவை எனக்குப் பிடிக்கும். அவர் இந்திய அணிக்கு நிறைய ரன்களை குவித்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

Monday, 14 September 2015

சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

By     No comments:


யு.எஸ்.ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சா, மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யு.எஸ். ஓபன் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, கேஸி டெலக்குவா மற்றும் யரோஸ்லாவா இணையை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சானியா மிர்சா ஹிங்கிஸ் ஜோடி 6 - 3, 6 -3 என்ற நேர் செட் கணக்கில் கேஸி இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

யு.எஸ்.ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தச் ஜோடிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது டூவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " யு.எஸ். ஓபனில் மகத்தான வெற்றி பெற்ற சானியா மிர்சா மற்றும் மார்ட்டினா ஹிங்கிஸூக்கு வாழ்த்துக்கள். உங்களின் சாதனைகள் எங்களுக்கு பெருமை அளிக்கிறது". என்று தெரிவித்திருந்தார்.

சானியா, ஹிங்கிஸ் ஜோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.