Showing posts with label beautytips. Show all posts
Showing posts with label beautytips. Show all posts

Friday, 18 September 2015

உங்க பல் மஞ்சளா இருக்கா? இதோ அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள்!

By     No comments:

பலருக்கு பற்கள் புகைப்பிடிப்பது மற்றும் ஆல்கஹால், காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைக் குடித்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். இப்படி மஞ்சளாக இருக்கும் பற்களை வெண்மையாக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட டூத்பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதுவும் ஒரு நாளைக்கு பலமுறை அந்த டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்குவோம். இருப்பினும் அந்த டூத் பேஸ்ட்டுகளில் உள்ள கெமிக்கல்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கு பதிலாக, எனாமலை அரித்துவிடும். வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள்!!! எனவே பலர் பல் மருத்துவரை சந்தித்து பற்களை ப்ளீச்சிங்க், ஒயிட்னிங் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். இப்படி அடிக்கடி செய்வதால், பற்கள் சென்சிடிவ்வாகி கூச ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, அது தற்காலிகமே. ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், பலன் நிரந்தரம் மட்டுமின்றி, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் விரைவில் அகலும். ஈறுகளில் இரத்தம் கசிகிறதா? இதோ அதைத் தடுக்க சில இயற்கை வைத்தியங்கள்! சரி, இப்போது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் சில எளிய வழிகள் குறித்து காண்போம்.

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கும். அதற்கு ஸ்ட்ராபெர்ரி பழத்தை அரைத்து, அதில் 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும். இப்படி தினமும் இரு வேளை செய்து வந்தால், நல்ல பலனை உடனடியாகக் காணலாம்.

எலுமிச்சை எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், அவற்றைக் கொண்டு பற்களைப் பராமரித்தால், பற்களில் உள்ள கறைகள் அகலும். அதற்கு எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து கலந்து, பற்களை தேய்த்து குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.

ஆரஞ்சு தோல் ஆரஞ்சு தோல் கூட பற்களில் உள்ள நீங்கா மஞ்சள் கறைகளை நீக்க உதவும். அதற்கு ஆரஞ்சு பொடியை உலர்த்தி, பொடி செய்து, தினமும் அதனைக் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதனைக் கொண்டு வாரம் ஒருமுறை பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். குறிப்பாக இதனைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்க வேண்டாம். ஏனெனில் இது பற்களின் எனாமலை அரித்துவிடும்.

துளசி துளசி இலைகள் கூட மஞ்சள் பற்களுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசி இலைகளை பொடி செய்து தினமும் பற்களை துலக்கலாம் அல்லது தினமும் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

கிராம்பு பல நூற்றாண்டுகளாக பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கிராம்பு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளைப் போக்குவதோடு, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கவும் உதவும். அதற்கு கிராம்பை பொடி செய்து தினமும் அதனைக் கொண்டு பற்களை துலக்க வேண்டும்.


Wednesday, 16 September 2015

கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்க சில வழிகள்!!!

By     No comments:

பலருக்கும் முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும். இதற்கு காரணம் வெயில் தான். வெயிலில் அதிகம் சுற்றும் போது, ஒரே இடத்தில் சூரியக்கதிர்கள் அதிகம் படுவதால், அவ்விடம் கருமையாகும். நாம் முகத்திற்கு தினமும் பராமரிப்பு கொடுப்பதால், முகம் அதிகம் கருமையாவதில்லை. ஆனால் கைகளை பலரும் கண்டு கொள்வதில்லை.

கழுத்தில் உள்ள கருமையை நீக்க சில எளிய வழிகள்!!! அதனால் தான் பலருக்கும் கைகள் மட்டும் சற்று கருமையாக இருக்கிறது. மேலும் இந்த கருமையைப் போக்குவதற்கு அழகு நிலையங்களுக்கு சென்று ப்ளீச்சிங் மற்றும் இதர சரும சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.

இருப்பினும் அவை தற்காலிகமே தவிர நிரந்தரமல்ல. அதுவே இயற்கைப் பொருட்களைக் கொண்டு கைகளைப் பராமரித்தால், கருமை நீங்குவதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கருமையை நீக்க சில டிப்ஸ்... சரி, இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

தயிர் தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையைப் போக்கலாம்.

தக்காளி தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.

பாதாம் பாதாமை இரவில் படுக்கும் போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.

பப்பாளி பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

மஞ்சள் தூள் மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.

கற்றாழை கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.


Home Remedy To Remove Skin Tan and Dark Marks

By     No comments:

Home Remedy To Promote Hair Growth

By     No comments:

Tuesday, 15 September 2015

திருமணத்திற்கு முன்பு நடக்கும் மருதாணி நிகழ்வு பற்றிய உண்மையான தகவல்கள்!!

By     No comments:

இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் புனிதமான மற்றும் தூயதாக்கப்பட்ட சடங்காக கருதப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு, திருமணம், திருமணத்திற்கு பின்னான சடங்கு என பல வகையான சடங்குகளை திருமணங்கள் கொண்டுள்ளதால், இவைகள் மிகவும் நீள மற்றும் விரிவான சடங்குகளாகும்.

திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மருதாணி நிகழ்வாகும். குதூகலம் நிறைந்த இந்த நிகழ்வு, பெரும்பாலும் மணமகளின் வீட்டில் தான் கொண்டாடப்படும்.

நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தங்களின் திருமண பழக்கங்கள், சடங்குகள் மற்றும் பண்பாடுகளின் படி, இந்த சடங்கை வெவ்வேறு மாதிரி கொண்டாடி வருகின்றனர். மேலும் தங்களின் வசதி மற்றும் மதிப்பை பொறுத்து, அதற்கேற்ப இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.

மருதாணி நிகழ்வு மணமகளின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை ஒன்று சேர்த்து மணமகளை ஆசீர்வாதம் செய்யவும், கேளிக்கைக்காகவும் தான் மணமகளின் குடும்பம் இந்த மருதாணி நிகழ்வை கொண்டாடுகிறது.

வீடு அல்லது ஹோட்டல் பெரும்பாலும் இந்த நிகழ்வு மணமகளின் வீட்டில் அல்லது ஏதேனும் ஒரு ஹோட்டலில், திருமண நாளுக்கு முந்தைய நாள் இரவு அல்லது திருமண நாளுக்கு சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படும். இந்த நிகழ்வின் போது, மணமகளின் கைகள் மற்றும் கால்களுக்கு, தொழில் ரீதியான மருதாணி டிசைனர் ஒருவர் அல்லது சில உறவினர்கள் மருதாணி போட்டு விடுவார்கள்.

அக்கா அல்லது தங்கை இந்தியாவில் சில இடங்களில் மணமகளின் கணவராக வரப் போகிறவரின் அக்கா அல்லது தங்கை தான் மணமகளுக்கு இந்த நிகழ்வின் போது முதலில் மருதாணியை போடுவார். சில இடங்களில் மணமகளின் தாயார் மருதாணியை முதலில் போட்டு விட்டால், அது மங்களகரமாக கருதப்படுகிறது.

மணப்பெண் தண்ணி கணவனிடம் தன்னை அர்பணித்தல் மருதாணி போடுவது என்பது மணமகளை அலங்கரிப்பதற்காக மட்டுமல்ல. மாறாக கன்னிப்பெண்ணாக இருக்கும் மணப்பெண் தன் கணவனிடம் தன்னை அர்பணிப்பதற்காக மேற்கொள்ளும் மாற்றத்தை இது உருவாக்கப்படுத்துகிறது.

காமசூத்ராவின் படி காமசூத்திராவின் படி, மருதாணி என்பது பெண்களின் 64 கலைகளில் ஒன்றாகும். சங்கு, பூக்கள், கலசம், மயில், டோலி போன்றவைகள் தான் மணமகளுக்கு வைக்கப்படும் புகழ்பெற்ற மருதாணி வடிவங்கள் ஆகும். மணமகளுக்கு போடப்பட்டிருக்கும் சிக்கலான மருதாணி டிசைனுக்கு மத்தியில் மணமகனின் பெயரும் கூட ஒளிந்திருக்கும்.

கணவனின் பெயர் பொதுவாக மருதாணிக்கு மத்தியில் கணவன் பெயரை கண்டுபிடிக்க முடியாத படி போடப்படுவது, மணமகன் அதனை கண்டுப்பிடிப்பதற்காகவே. இது அவருடைய கண் பார்வையையும் முனைப்பான அறிவாற்றலையும் காட்டும்.

இதனால் மணமகள் ஈர்க்கப்படுவார் அல்லவா? பொதுவாக மருதாணி விழாவுடன் சேர்த்து சங்கீத் நிகழ்ச்சியும் இடம் பெரும். மருதாணி சடங்கின் போது மரபு ரீதியான பாடல்களுக்கு பெண்கள் ஆடியும் பாடியும் கொண்டாடுவதால், இது கிட்டத்தட்ட ஒரு திருவிழா உணர்வையே உண்டாக்கி விடும்.

வெளிறிய நிற ஆடைகளுடன் மிதமான நகைகள் இந்த நிகழ்வின் போது வெளிறிய நிற ஆடைகளுடன் மிதமான நகைகள் அணியப்பட்டு அழைத்து வரப்படுவார் மணமகள். இந்த மரபின் படி, மருதாணி நிகழ்ச்சிக்கு பிறகு, திருமண நாள் வரை மணப்பெண் வீட்டை விட்டு வெளியேற கூடாது.

மருதானியின் நிறம் மருதானியின் நிறம் எந்தளவிற்கு கருமையாகவும் ஆழமாகவும் மணப்பெண்ணின் கைகளில் பதிந்திருக்கிறதோ அந்தளவிற்கு அவரிடம் அவருடைய கணவரும், மாமனாரும் மாமியாரும் அன்பை பொழிவார்கள் என நம்பப்படுகிறது.

நல்ல சகுனம் மருதாணி சடங்கு திருமணத்தில் உள்ள காதலின் வலுவையும் சக்தியையும் எடுத்துக்காட்டும். அதனால் மணமகளுக்கு இதனை ஒரு நல்ல சகுனமாக கருதுகின்றனர். மணப்பெண்ணின் கைகளில் மருதாணி எந்தளவிற்கு நீடித்து நிலைக்கிறதோ அந்தளவிற்கு அவருடைய வருங்காலம் மங்களகரமாக அமையும்.