Showing posts with label others. Show all posts
Showing posts with label others. Show all posts

Friday, 18 September 2015

Human Sacrifice @ PRP Granite Quarry - Why Jayalalitha Is Silent,Vijayakanth Questions?

By     No comments:

Nadigar sangam Election - Sarathkumar Team Threatening as J. K. Rithesh Files Police Complaint

By     No comments:

When People Prefer For Books Than Alcohol, That Is The Day Tamil Nadu Will Awake - Vairamuthu

By     No comments:

Actress Babilona Gets Married To A Fitness Trainer In A Christian Way

By     No comments:

Top Brass Of MDMK Leaving The Party - Media Are Blowing It Up - CPI State Secretary For TN

By     No comments:

Its A Right Time We Fight To Save Tamil From Modi's Anti Tamil Attitude

By     No comments:

Thursday, 17 September 2015

பேருந்தில் இருந்த ஓட்டை... ஓடும் பஸ்ஸிலிருந்து இளம்பெண் தவறி விழுந்த கொடுமை!...

By     No comments:

இந்த உலகத்தை முழுதாக பார்த்திருக்கீங்களா? அரிய காட்சியை பார்க்க வாங்க போகலாம்...

By     No comments:

Humpback Whale Breaches on Top of Kayakers

By     No comments:

இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்!!!

By     No comments:

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு என்பார்கள். ஆயிரம் தடவை போய் வந்து திருமணம் செய்யலாம் என்ற பழமொழி தான் ஆயிரம் பொய் சொல்லி என்று காலப்போக்கில் மாறிவிட்டது.

ஆயிரம் தடவை போய் வருவதைவிட, சில விஷங்கள் மற்றும் கேள்விகளை தெள்ளத்தெளிவாக கேட்டு, நல்ல புரிதலோடு இல்வாழ்க்கையை தொடங்குவதே, மணம் முடிக்க போகும் இருவருக்கும் உகந்தது ஆகும்.

கட்டங்கள் நன்றாக இருக்கிறதா என்பதைவிட, இருவரது மனநிலையும் ஒரே பாதையில் செல்ல தகுந்தவண்ணம் இருக்கிறதா என்பது தான் இந்த கால நிலைக்கு சரியானதாக இருக்கும். முன்பு போல, ஆண், பெண் என வேலைகளில் பிரிந்து செய்யும் வழக்கம் மறைந்து, இருவரும் எல்லா வேலைகளிலும் பங்கெடுத்து செய்யும் வழக்கம் பிறந்துள்ளது.

இந்த சூழ்நிலைக்கு ஏற்ப திருமணம் செய்யும் இளைஞர்கள் குறைந்தது இந்த கேள்விகளுக்காவது பதில் தெரிந்துக்கொண்டு இல்வாழ்க்கையை தொடங்கினால் அது நல்லறமாகவும், மகிழ்ச்சி நிறைந்த பூவனமாகவும் இருக்கும்.....

குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதமா? இதுவெல்லாமா என்று சிலர் யோசிக்கலாம், ஆனால் இன்றைய இளம் பெண்கள் திருமணம் ஆன உடனே குழந்தைகள் பெற்றுக்கொள்ள அதிகம் விரும்புவதில்லை. இந்த எண்ணம் சில சமயங்களில் குடும்பத்தினுள் சண்டை சச்சரவுகள் ஏற்பட காரணமாகிவிடும்.

குடும்ப பொருளாதார நிலை உங்களது குடும்பத்தின் உண்மையான பொருளாதார நிலை குறித்து பேசி, வரவு, செலவுகள் பற்றி முடிவு செய்துக்கொள்ள வேண்டியது. பகட்டுக்காக பொய் சொல்லிவிட்டு பிறகு திருமணம் செய்த பிறகு உண்மை தெரிய வருவது சிக்கல்கள் ஏற்படுத்திவிடும்.

மற்றும் முன்னரே இதை பற்றி பேசுவது, திருமணத்திற்கு பிறகு பெண்ணும் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கான வேலைகளை முன்னரே முடிவு செய்துக்கொள்ள உதவும்.

படிப்பும் முதிர்ச்சியும் இன்றைய ஹைஃபை வாழ்க்கை முறையில் அனைவரும் நவ நாகரீகமாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றார் போல், ஆண் பெண் இருவரும் தங்களது துணை நன்கு படித்தவராகவும், சமூகத்தில் முதிர்ச்சியான அறிவு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுபவராக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.எனவே, திருமணத்திற்கு முன்பே இதை பற்றி தெளிவாக பேசி முடிவு செய்துக்கொள்வது பின்னாளில் உங்கள் இருவருக்குள் , மன கசப்புகள் ஏற்படாமல் இருக்க உதவும்.

கொள்கைகள் மற்றும் ஈடுபாடு திருமணத்திற்கு முன்னரே உங்களது கொள்கைகள் மற்றும் ஈடுபாடுகள் என்னென்ன என கூறி ஓர் புரிதல் ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்.

ஒருவருக்கு சாமி கும்பிட பிடிக்கும், ஒருவருக்கு பிடிக்காமல் போகலாம். சாப்பிடுவதில் இருந்து, உங்களுக்கு பிடித்த விஷயங்கள் வரை முன்னரே தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வாழ்வியல் முறை ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் இருப்பது போல, அவரவர் விரும்பும்படி வாழவும் உரிமை இருக்கிறது. எனவே, உங்களது வாழ்வியல் முறை அவருக்கு ஒத்துவருமா என கேட்டுக்கொள்வது நல்லது.

இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் பார்டிகளுக்கு செல்ல ஆரம்பித்தவிட்டாலும் கூட, இன்னமும் ஆச்சாரம், சம்பிரதாயம் என வாழ்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, நீங்கள் உங்கள் வாழ்வியல் முறையோடு அந்த பெண்ணால் ஒத்துழைப்புக் கொடுத்து வாழ முடியுமா என அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

குடும்ப பழக்கவழக்கங்கள் நம் நாட்டில் தான், மாநிலம், ஊர், ஜாதி, மதம், குடும்பம் என பல வகைகள் மற்றும் தனி தனி, வழக்கங்கள் என பல இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல வாழ முடியுமா என முன்பே அறிந்துக்கொள்ளுங்கள்.

மணமக்களுக்காக இல்லாவிட்டாலும், பெற்றோர் விடமாட்டார்கள். எனவே, மாமியார், மருமகள் சண்டை வராமல் இருப்பதற்காகவாவது இதை முன்கூட்டியே சொல்லிவிட வேண்டியது அவசியம்.

விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை திருமண வாழ்வில் மணமக்கள் இருவருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை. இருவரில் யாராவது ஒருவராவது விட்டுக்கொடுத்து போக வேண்டும்.

ஒளிவுமறைவு இன்றி நீங்கள் திருமணம் செய்துக் கொள்ள போகிறீர்கள் என நிச்சயம் ஆகிவிட்டால். அதற்கு முன்பே உங்கள் இருவரை பற்றி ஒளிவுமறைவு இன்றி ஒருவரை ஒருவர் முழுதாக மனம்விட்டுப் பேசி புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

உங்களது மறுபக்கத்தையும் கூறிட வேண்டும் சின்ன சின்ன தீயப் பழக்கமாக இருந்தாலும் கூட, அவற்றை அவர்களிடம் கூறி. தான் இப்படி என்பதை கூறிவிடுவது நல்லது. இவை எல்லாம் காதல் திருமணங்களில் கூற தேவை இல்லை. அவர்களே தெரிந்து வைத்திருப்பார்கள். 

ஆனால், நிச்சயம் செய்து திருமணத்தில் இதற்கான வாய்ப்புகள் குறைவு, எனவே கூறி விடுங்கள். மற்றும் இது உங்கள் மீது ஓர் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.









2015 விநாயகர் சதுர்த்திக்கு வெளிவந்திருக்கும் சில வித்தியாசமான விநாயகர் சிலைகள்!!!

By     No comments:

விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் தங்களின் வீடுகளில் விநாயகர் சிலைகளை வாங்கி, விநாயகருக்கு பிடித்த பலகாரங்களான கொழுக்கட்டை, லட்டு, எள்ளுருண்டை போன்றவற்றை சமைத்து, விநாயகருக்கு படைத்து பூஜைகளை செய்து வருவார்கள்.

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்? விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பல வித்தியாசமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வெளிவரும். அந்த வகையில் இந்த வருடமும் பல வித்தியாசமான விநாயகர் சிலைகள் வெளிவந்துள்ளன.

விநாயகரின் தோற்றம் குறித்த கதைகள்!!! இங்கு 2015 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வெளிவந்திருக்கும் சில வித்தியாசமான விநாயகர் சிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்பைடர் மேன் விநாயகர் இந்த வருடம் ஸ்பைடர் மேன் விநாயகர் சிலை வந்துள்ளது. இந்த விநாயகர் சிலை குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும்.

கப்பர் சிங் விநாயகர் கப்பர் சிங் திரைப்படமானது 2012 ஆம் ஆண்டு வெளிவந்தாலும், இன்னும் இது ட்ரெண்ட்டாக உள்ளது என்பதை கப்பர் சிங் விநாயகர் மூலம் அறியலாம்.

அன்னா ஹசாரே விநாயகர் இந்த வருடம் அன்னா ஹசாரே விநாயகரும் மார்கெட்டில் வந்துள்ளது.

கிரிக்கெட் விநாயகர் 2015 உலக கோப்பைக்கு பின், இந்த வகையான விநாயகர் மிகவும் பிரபலமானார். மேலும் இந்த வருடம் இந்த கிரிக்கெட் விநாயகர் கிரிக்கெட் பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டு மார்கெட்டில் வெளிவந்துள்ளது.

உப்பி-2 விநாயகர் நடிகர் உபேந்திராவின் தீவிர ரசிகர்களுக்காக, இந்த வருடம் வித்தியாசமாக உப்பி விநாயகர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செல்ஃபீ விநாயகர் தற்போது எங்கு பார்த்தாலும் செல்ஃபீ எடுப்பது மிகவும் பிரபலமாக உள்ளதால், இந்த வருடம் நம் விநாயகரே தன் குடும்பமான சிவன், பார்வதி, முருகன் மற்றும் நந்தியுடன் சேர்ந்து செல்ஃபீ எடுத்தவாறான விநாயகர் சிலை வெளிவந்துள்ளது.

பாகுபலி விநாயகர் இந்த வருடம் வெளிவந்த மிகவும் பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படம் பல மக்களின் கவனத்தை ஈர்த்து, பல கோடி வசூல் சாதனை புரிந்ததையடுத்து, இப்படத்தின் தீவிர ரசிகர்களுக்காக பாகுபலி விநாயகர் வடிவமைக்கப்பட்டு மார்கெட்டில் வெளிவந்துள்ளது.


Wednesday, 16 September 2015

வினை தீர்க்கும் நாயகனின் முழு அருள் பெற, விநாயகர் சதுர்த்தி சிறப்பு ஸ்லோகங்கள்!!!

By     No comments:

விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்தநாளாக, ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. வினை தீர்க்கும் விநாயக பெருமானை மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் சிலையாக வைத்து பூஜை செய்வது வழக்கம்.

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்? இந்தியாவில், இந்த ஒரு நாள் மட்டும் இலட்சக் கணக்கான விநாயகர் சிலைகள் விற்பனை ஆகிறது. விநாயகர் சதுர்த்தியை போலவே, விநாயகரை ஆற்றில், கடலில் கரைக்கும் விழாவும் இந்தியாவில் மிகவும் விமர்சையானது ஆகும்.

விநாயகரை முதன்மைக் கடவுளாக வணங்கக் காரணங்கள்!!! கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் முழு அருளையும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நீங்கள் இந்த சிறப்பு ஸ்லோகங்களை வீட்டில் இருந்தவாறே பாடிப் பெறலாம்....

ஸ்லோகம் 1 சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

ஸ்லோகம் 2 ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 3 ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 4 ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

ஸ்லோகம் 5 மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஸ்லோகம் 6 கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி என்றிடக் கருமம் ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே.

ஸ்லோகம் 7 வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

ஸ்லோகம் 8 அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஸ்லோகம் 9 கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம் உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

ஸ்லோகம் 10 பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா.

ஸ்லோகம் 11 விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்! விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.

ஸ்லோகம் 12 வக்ரதுண்டாய ஹீம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.


வீதியில் நின்று ஆட்டோகாரரிடம் லஞ்சம் வாங்கும் பொலிஸ்...

By     No comments:

ஒரு தமிழரின் குமுறல்... ஒட்டகம் மேய்க்கும் கொடுமை!...

By     No comments:

We Welcome Any Party Who Accepts Anbumani as CM - Dr.Ramadoss On Election Alliance

By     No comments:

A Musical Tribute To Dr A. P. J. Abdul Kalam - Katrinile Kalam

By     No comments:

தனது பேஸ்புக் அலுவலகத்தை வெளிப்படையாக சுற்றி காட்டிய மார்க்....

By     No comments:

'எனது அலுவலகமும், வேலையும் மிகவும் வெளிப்படையானது. இங்கே ஊழியர்கள் வேலை பார்க்கும்போது தங்களை சுதந்திரமாக உணரலாம்; அதன் மூலம் அவர்களின் வேலையும் சிறப்பாக அமையும்' என்கிறார் மார்க்.

நம் அலுவலகத்தில் தினசரி வேலைகளுக்கு நடுவே ஃபேஸ்புக் பார்க்கிறோம். ஆனால் அதையே வேலையாக வைத்திருக்கும் ஃபேஸ்புக் அலுவலகத்தைப் பார்த்திருக்கிறோமா?

முதன்முறையாக ஃபேஸ்புக் நிறுவனமே, தனது தலைமை அலுவலத்தை நேரடியாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறது. 3:51 நிமிடங்கள் கொண்ட அந்த காணொளியில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தோன்றி, தனது அலுவலகத்தைச் சுற்றிக் காண்பித்திருக்கிறார்.

அதில், ஃபேஸ்புக் ஊழியர்களின் மேசை, தனது அலுவல் இடம், சந்திப்பு அறை ஆகியவற்றை ஆர்வத்துடன் விளக்குகிறார் மார்க். இரண்டு மாதங்களுக்கு முன்னால்தான் புதிய அலுவலகத்துக்கு வந்ததாகக் கூறும் மார்க், 'ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், அவர்களை, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வைப்பதுமே, தனது வேலை' என்கிறார்.

இதனாலேயே தனது தலைமை அலுவலகத்தின் ஊழியர் அறைகளை தனித்தனியாக அமைக்காமல், ஒரே கூரையின் கீழ் இடையில் எவ்வித சுவர்களும் இல்லாமல் அமைத்திருக்கிறார்.

மார்க் வேலை பார்க்கும் இடமும், சிறப்பாக எந்த வசதிகளும் செய்யப்படாமல் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. மேசையின் இரு பக்கங்களிலும் புத்தகங்கள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

அதில் தொலைதொடர்பு குறித்த புத்தகமும் அடக்கம். அதற்கு அருகிலேயே ஃபேஸ்புக்கின் சின்னம், ஒரு மரப்பட்டையில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு செயற்கைக்கோள், நிறுவனத்தின் உள்கட்டமைப்பைக் கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்டிருக்கிறது.

தனது பெரும்பாலான நேரத்தை இங்கேதான் செலவிடுகிறேன் என்று கான்ஃபரன்ஸ் அறையைக் காண்பிக்கிறார் மார்க். ஃபேஸ்புக் அலுவலக ஊழியர்களுக்கு எனத்தனியாக எந்தவொரு அறையையும் ஒதுக்காத மார்க், வெளியில் இருந்து சந்திக்க வருபவர்களையும், அலுவல் விஷயமாகத் தன்னைக் காண வருபவர்களையும் சந்தித்துப் பேசவே இந்த இடம் என்கிறார்.

'எனது அலுவலகமும், வேலையும் மிகவும் வெளிப்படையானது' என்று கூறுபவர், 'இங்கே ஊழியர்கள் வேலை பார்க்கும்போது தங்களை சுதந்திரமாக உணரலாம்; அதன் மூலம் அவர்களின் வேலையும் சிறப்பாக அமையும்' என்கிறார்.

கவனக் குறைவினால் ஏற்பட்ட விபரிதம்!... மயிரிழையில் உயிர் தப்பிய மனிதரின் திக் திக் நிமிடம்...

By     No comments:

Tuesday, 15 September 2015

உங்கள் மனம் கவர்ந்த பெண்ணிடம் அந்த கேள்வியை கேட்க சரியான நேரம் எது??

By     No comments:

ஆண்கள், பாத்ரூமில் கூட வழுக்கி விழ மாட்டார்கள், ஆனால், காதலில் "தொபக்கடீர்.." என விழுந்துவிடுவார்கள். காதலில் விரைவாக விழும் ஆண்களுக்கு, அந்த காதலை வெளிப்படுத்த நீண்ட நேரம்.... அல்ல, அல்ல காலம் எடுத்துக் கொள்ளும். காரணம், காதலை, எப்போது, எந்த சூழ்நிலையில் கூற வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது.

உங்களை ஒருவர் லவ்வுகிறாரா.. என்பதை இதை வைத்துக் கண்டுப்பிடித்துவிடலாம்!!! வருட கணக்கில் காத்திருந்து, ஓர் மொக்கையான தருணத்தில் காதலி வெளிபடுத்தி "பல்பு.." வாங்குவது, ஆண்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வரும் செயல்.

எனவே, எந்த நேரத்தில் காதலை வெளிபடுத்தலாம், அந்த பெண் உங்கள் மீது காதலில் தான் இருக்கிறாளா? அல்லது இந்த தருணத்தில் கூறினால் அந்த பெண்ணுக்கு உங்கள் மீது காதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா? என நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பெண்களை உச்சமடைய வைக்கும் ஆச்சரியமான எளிய வழிமுறை!!! இதையெல்லாம் எப்படி தெரிந்துக் கொள்வது என யோசிக்கிறீர்களா.... போய் படிங்க பாஸ்....

கவனம் தேவை முதலில் உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் பழகும் அதே விதத்தில் தான் அவரும் பழகுகிறாரா? என அறிந்துக் கொள்ள வேண்டும். உங்களை தொடர்புக் கொள்ள அவர் அடிக்கடி முயற்சிக்கிறார் என்றால். சரியான சந்தர்பத்தில் நீங்கள் உங்கள் மனதை திறந்து காதலை வெளிபடுத்திவிடலாம்.

உற்சாகம் அடைதல் உங்களை காணும் போதெல்லாம் காரணமே இல்லாமல் உற்சாகமாக அவர் காணப்படுகிறார் என்றால், இந்த ஒரு அறிகுறியை வைத்தே நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்தி விடலாம். ஏனெனில், பெண்கள் அவர்களது இதயத்திற்கு அருகாமையில் வைத்திருக்கும் நபர்களை கண்டால் தான் உற்சாகம் அடைவார்கள். (பசங்களுக்கு ஒரு பாட்டில் பீர் கூலிங்கா இருந்தாலே போதுமே...)

தனது விருப்பங்களை பட்டியிலிடுவது எப்போது ஓர் பெண் தனக்கு பிடித்த விஷயங்கள், இடங்கள், உணவு என ஒன்றைவிடாமல் உங்களிடம் பட்டியலிட்டு கூற ஆரம்பிக்கிறாரோ, அப்போதே அவருக்கு உங்களை மிகவும் பிடித்துவிட்டது என்று தான் பொருள், இந்த நிகழ்வு நடந்துவிட்டால், நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி உங்கள் காதலை கூறிவிடுங்கள்.

திட்டங்களை கூறுவது அவசியமே இன்றி, நாளை நான் அங்கு போகிறேன், எனக்கு பெரிதாய் வேலை ஏதும் இல்லை என்று ஓர் பெண் கூறுகிறார் என்றால், மறைமுகமாக அவர் உங்களையும் உடன் அழைக்கிறார் என்று அர்த்தம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது, நீங்கள் அவளிடம் காதலை தைரியமாக கூறலாம் என்பதற்கான அறிகுறிகள்.

உங்களை சோதனை செய்தல் நீங்கள் பெண்கள் விஷயத்தில் எப்படி, புகை, மது போன்ற பழக்கங்கள் போன்றவை சார்ந்து உங்களை ஓர் பெண் சோதனை செய்ய அல்லது ஆராய ஆரம்பித்தால், அவருக்கு உங்கள் மீது அபிப்பிராயம் இருப்பதை அறிந்துக் கொள்ளலாம்.

தோழிக்கு கூட இது போன்ற அக்கறை இருக்கும். எனவே, அவள் உங்கள் மீது அளவுக்கு அதிகமாக இது சார்ந்து கேட்கிறாள் என்றால், நீங்கள் உங்கள் காதலை வெளிபடுத்திவிடலாம்.

காதலிக்க ஆசை உங்களிடம், திரும்ப, திரும்ப, எனக்கு சிங்கிளாக இருப்பது போரடிக்கிறது, காதல் கொள்ள விரும்பிகிறேன், தகுந்த ஆணை தேடுகிறேன் என கூறி வருவது, உங்கள் மீது அவளுக்கு விருப்பம் இருப்பதை மறைமுகமாக தெரிவிக்கும் முறை என பெண்களே கூறுகிறார்கள்.

கூறுவதெல்லாம் வேத வாக்கு நீங்கள் கூறுவதை எல்லாம் வேத வாக்காக எடுத்துக்கொள்வது, நீங்கள் "ஜோக்" என்று சொன்னால் கூட விழுந்து, விழுந்து சிரிப்பது போன்றவை, அந்த பெண் உங்கள் மீது மிகவும் பிரியமாகவும், ஆவலாகவும் இருக்கிறார் என்பதன் பொருள்.

பொன்னான தருணங்கள் நீங்கள் இருவரும் சேர்ந்திருக்கும் தருணங்கள் அனைத்தும் நினைவை விட்டு அகலாத வண்ணம், பொன்னான தருணங்களாக இருக்கின்றன என்றால், வேறென்ன வேண்டும். தாராளமாக உங்கள் காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தலாம்.

சில தீண்டல்கள் வெறும் நட்புடன் பழகும் பெண்ணிடம் அந்த தீண்டல்கள் இருக்காது. தோளடு உரசுதல், உங்கள் கையை பற்றிக்கொண்டு விளையாடுதல். முடியை பிடித்து இழுத்து விளையாடுவது போன்றவை அந்த பெண்ணிற்கும் உங்களை பிடித்திருக்கிறது என்று சொல்லும் அறிகுறி.

உங்கள் குடும்பத்தோடு நெருங்கி பழகுதல் மற்ற தோழிகளை விட உங்க குடும்பத்தோடு நெருங்கி பழகும் குணம் மற்றும் உங்கள் தாய், தந்தையர் மீது எடுத்துக்கொள்ளும் அக்கறை போன்றவை கூட நீங்கள் காதலை அந்த பெண்ணிடம் தாராளமாக வெளிப்படுத்தலாம் என்பதற்கான அச்சாரம் தான்.

ஆனால், சில பெண்களிடம் தங்களது நண்பர்களின் அப்பா, அம்மாவையும், அப்பா, அம்மா என்று கூறி மகள் போல பழகும் குணம் இருக்கும். எதற்கும் முழுதாய் புரிந்துக் கொண்டு செயல்படுங்கள்.








பெண்ணிற்கு பெண்ணே எதிரியா?... எப்படி கொடுமைப் படுத்துறாங்கனு பாருங்க!...

By     No comments: