Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts

Friday, 18 September 2015

நாடாளுமன்றம் அனுமதித்தால் மரண தண்டனை: மைத்திரிபால சிறிசேனா

By     No comments:

நாடாளுமன்றம் அனுமதித்தால் அடுத்த வருடம் முதல் இலங்கையில் மரண தண்டனையை அமல்படுத்தத் தயாரென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.



இன்று காலி பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அண்மையில், நாட்டின் பல பாகங்களில் சிறார்கள் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி சிறிசேனா அதனை தடுப்பதற்கு மரண தண்டனையை அமல்படுத்துமாறு மக்கள் கோரிவருவதாகத் தெரிவித்தார்.

ஆனால், மரண தண்டனையை அமல்படுத்துவதற்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறிய ஜனாதிபதி, அதனை அமல்படுத்துவதில் தனக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்று கூறினார்.

சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட மரண தண்டனை அமல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேனா, மரண தண்டனையை அமல்படுத்த தனக்கு அதிகாரங்கள் இருந்தாலும் நாடாளுமன்றத்தின் அனுமதியை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் அனுமதியை வழங்கினால் அடுத்த வருடம் முதல் மரண தண்டனையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்ரிபால் சிறிசேனா தெரிவித்தார்.

இலங்கையில் மரண தண்டனை விதிக்க சட்டத்தில் அனுமதி இருந்தாலும், 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை குற்றவியல் சட்டத்தின்படி, குற்றவாளிக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதனை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியம்.

ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதி அதற்கான அனுமதிகளை வழங்குவதில்லை என்பதால், மரண தண்டனை விதிக்கப்படும் நபர்கள் ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணங்களை வெளியிட்டது மேற்குவங்க அரசு: மர்மம் விலகுமா?

By     No comments:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ளது.

இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷின் மரணம் சிதம்பர ரகசியமாக மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வந்தது.




நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட்டால் அண்டை நாடுகளுடனான அயல் நாட்டுக் கொள்கை பாதிக்கப்படும் என்று கூறி ஆவணங்களை வெளியிட மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் நேதாஜி தொடர்பான 64 கோப்புகள் உள்ளடக்கிய 12 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை 18 ஆம் தேதி ( இன்று ) வெளியிடப்போவதாக மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேதாஜி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உள்ளடக்கிய சி.டி.யை மேற்குவங்க அரசு இன்று காலை வெளியிட்டுள்ளது.




மேற்குவங்க காவல்துறை மியூசியத்தில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும் இந்த ஆவணங்களை ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த ஆவணங்கள் நேதாஜி குடும்பத்தாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இத்தனை நாள் கட்சியில் இருந்ததற்கு நன்றி : வைகோ விரக்தி

By     No comments:

மதிமுக கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதை பற்றி கருத்துக்கூறிய வைகோ, இதுநாள் வரை அவர்கள் கட்சியில் இருந்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக விலிருந்து சிலர் வெளியாகி திமுக வில் சேர்ந்து வருகின்ற நிலையில், இப்போது, அதன் மாநில போருளாளராக பதவி வகிக்கும் திண்டிவனம் மாசிலாமணியும் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோவிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது அவர் “எம்.பி., எம்.எல்.ஏ, போன்ற பதவிகளுக்கு ஆசைப்படுபவர்களே கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர்.

இருந்தாலும், இத்தனை நாள் கட்சியில் இருந்ததற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் யாரெல்லாம் கட்சியிலிருந்து விலக நினைக்கிறார்களே அவர்கள் எல்லாம் செல்லலாம். அவர்களை வாழ்த்தி அனுப்புகிறேன்” என்று விரக்தியாக பேசினார்.

மேலும் “மதிமுக தலைவர்களால் உருவாக்கப்பட்டதல்ல. தொண்டர்களால் உருவாக்கப்பட்டது” என தெரிவித்தார்.

Tuesday, 15 September 2015

குறைந்த வருவாய் பிரிவு மக்களுக்காக அம்பத்தூரில் 2300 குடியிருப்புகள்: முதல்வர் அறிவிப்பு

By     No comments:

சென்னை அம்பத்தூரில் சுமார் ரூ.380 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய 2,300 குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பல திட்டங்களை அறிவித்தார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னையில் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக் கூடிய விலையிலான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், சென்னை அம்பத்தூரில் அனைத்து வசதிகளுடன், இரு படுக்கை அறைகளுடன் கூடிய 2,300 குடியிருப்புகள் தோராயமாக ரூ.380 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும். ஒரு குடியிருப்பின் விலை 20 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு அலுவலர்களுக்கு சென்னை பாடி குப்பம் மற்றும் வில்லிவாக்கம் பகுதியில் 500 பன்னடுக்கு, மாடி குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்படும். ஒவ்வொரு குடியிருப்பும் கழிப்பறைகளுடன் கூடிய இரண்டு படுக்கை அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு உட்காரும் மற்றும் உணவு அருந்தும் கூடம் உடையதாக கட்டப்படும். ஒரு குடியிருப்பின் பரப்பளவு ஏறக்குறைய 700 சதுர அடியாக இருக்கும்.

இத்திட்டத்தின் மதிப்பீடு 225 கோடி ரூபாயாகும். இக்குடியிருப்புகளுக்கான கட்டுமானம் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில், 674 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் பெருவாரியாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக 2,800 குடியிருப்பு அலகுகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார்

Monday, 14 September 2015

கதாநாயகனாகிறார் ஸ்டாலின்

By     No comments:

திமுக சார்பில் தயாரிக்கப்படும் குறும்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் ஸ்டாலின்.

”முடியட்டும். விடியட்டும்” என்பதுதான் திமுக வின் தற்போதைய பிரசார கோஷம். வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இதே தலைப்பில் திமுக ஒரு பிரச்சார குறும்படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்த குறும்படத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படம், அதிமுக அரசில் தற்போது நாட்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமையும் எனத் தெரிகிறது. மேலும், மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த போது செய்த சாதனைகள், சமிபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கூட்டங்கள் பற்றிய விவரங்கள் இதில் இடம்பெறுகிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்படுகிறது.

திமுக வின் பிரச்சார படமாக வெளிவரப்போகும் இந்த குறும்படம் கலைஞர் தொலைக்காட்சியில், தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பே வெளியாக உள்ளது. ஸ்டாலின் ஏற்கனவே 1987-ல் கலைஞர் கதை, வசனம் எழுதிய ”ஒரே ரத்தம்” எனும் திரைப்படத்தில் புரட்சிகரமான இளைஞராக நடித்தார். மேலும் தூர்தர்ஷனில் வெளிவந்த “குறிஞ்சி மலர்” எனும் தொடரிலும் நடித்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் நடிக்க இருக்கும் இந்த குறும்படத்தை திமுக.வினர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

வாஜ்பாய் இறந்துவிட்டதாக அஞ்சலி செலுத்தி பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமை ஆசிரியர்

By     No comments:


ஒடிசாவில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், வாஜ்பாய் இறந்து விட்டதாக அறிவித்து, இரங்கல் கூட்டம் நடத்தி, பின் பள்ளிக்கு விடுமுறையும் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் ஒரு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் கமலகண்ட தாஸ். இவர், ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு ஒரு ஆசிரியர் இவரிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறினார்.

இதனை நம்பிய தாஸ், நேராகப் பள்ளிக்குச் சென்று மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை அழைத்து வாஜ்பாய்க்கு இரங்கல் கூட்டம் நடத்தி, அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல், பள்ளிக்கும் விடுமுறையும் அறிவித்து விட்டார்.

இதனை அறிந்த உள்ளூர்காரர்கள், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சனதன் மாலிக்கிடம் புகார் அளித்தனர். இது பற்றி கருத்துக் கூறிய கலெக்டர் “அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளேன். தேவைப்பட்டால் அவருக்கு எதிராக குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும்” என அறிவித்துள்ளார்.

நரபலி விசாரணையை தடுப்பது ஏன்? அதிகாரமிக்கவர்களை காப்பாற்றுவதற்கா?

By     No comments:


நரபலி விசாரணையையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “சட்டவிரோதமான கிரானைட் கொள்ளை மாநிலத்தின் சுற்றுப் புறச் சூழலை மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய் அரசின் கஜனாவிற்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க 2014-ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு சகாயத்தை சிறப்பு ஆணையராக நியமித்தது.

அவரது விசாரணையில் இந்த கிரானைட் கொள்ளையால் அரசுக்கு 16,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாக கிரானைட் குவாரி நடத்துபவர்களால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு சகாயம் உத்தரவிட்டார். ஆனால் அவர் போட்ட உத்தரவை மதிக்க மறுத்து, தோண்டியெடுக்கும் பணியை தாமதம் செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நடக்க வேண்டிய விசாரணையையும், நரபலி விசாரணையையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்திருப்பது கண்டனத்திற்குரியது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயம் கிடைக்க வழி செய்வது தான் அரசின் கடமையே தவிர, அதிகாரமிக்க ஒரு சிலரைக் காப்பாற்றுவதற்கு இல்லை" என்று சாடியுள்ளார்.