Showing posts with label other. Show all posts
Showing posts with label other. Show all posts

Saturday, 19 September 2015

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் உணவுகள்!!!

By     No comments:


வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உங்களை வேகமாக நடமாட முடியாமல் தடுக்கிறதா? ஆம் என்பது தான் பெரும்பாலானவர்களின் பதில். வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது தான் தற்போதைய ஆண்களின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது. ஆனால், நீங்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் வேகமாக உங்கள் வயிற்றில் தேங்கியிருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்பை கரைக்க முடியும். இதனால், உங்கள் உடல் எடை குறைவது மட்டுமின்றி, குடலியக்கம் சீராகும், செரிமானம் சரியாகும்....

பப்பாளி பழம் கொழுப்பை கரைக்க உதவுவதில் ஓர் சிறந்த பழம் பப்பாளி. இதில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. உங்கள் டயட்டில் பப்பாளியை சேர்ப்பதால் விரைவாக கொழுப்பை குறைத்து, உடல் எடையில் நல்ல மாற்றம் காண முடியும்.

தக்காளி கொழுப்பை எதிர்த்து போராடும் பழம் எனும் பெயர் பெற்றது தக்காளி. சரியான அளவு உங்கள் டயட்டில் தக்காளியை சேர்த்துக் கொள்வதால் தொப்பையை குறைக்க முடியும். இது அதிகப்படியான சோடியம், தண்ணீர், கொழுப்பை நீக்க உதவுகிறது.

காளான் குடலியக்கத்தை சரியாக்கி, சீரான முறையில் இயங்க வைத்து, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது காளான். இது, வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க பெருமளவில் உதவுகிறது.

ஓட்ஸ் வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுவதில் ஓட்ஸ் ஓர் சிறந்த உணவாக இருக்கிறது. உங்களது காலை உணவில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள், இதில் இருக்கும் நார்சத்து உடல் எடையை குறைக்கவும், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கவும் உதவுகிறது.

வாழைப்பழம் வாழைப்பழம் உங்கள் செரிமனாத்தை வேகமடைய வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க முடியுமாம்.

திராட்சை திராட்சை உங்கள் பசியை குறைக்கும் மற்றுமொரு சிறந்த உணவாகும். திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக குறைக்க முடியும். தொடர்ந்து நீங்கள் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் 10 நாட்களில் 10 பவுண்ட் எடை வரை குறைக்க முடியுமாம்.

வினோதமான முறையில் தூங்கும் விலங்குகள்... சுவாரசியமான மிக அரிய காட்சி!

By     No comments:


ஒவ்வொரு விலங்குகளையும் இறைவன் ஒவ்வொரு விதமாக படைத்துள்ளான். அவ்வாறான சில விலங்குகள் எப்படியெல்லாம் சுவாரஸ்யமான முறையில் தூங்குகின்றன என்று பாருங்கள்.


கர்ப்பிணி பெண்கள் காதில் விழக் கூடாத வார்த்தைகள்!!!

By     No comments:

ருவறையில் வளரும் போதே சிசு வெளியில் இருப்பவர் பேசுவதை உள்வாங்க ஆரம்பித்து விடுகிறது. மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மனநிலை கருவில் வளரும் சிசுவை பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்திலும் சரி, கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் நேரடியாகவும் சரி சில வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இது அவர்களை மனதளவில் பாதிப்படைய வைக்கலாம்...

கேள்வி 1 பிரசவிக்கும் போது வலி அதிகம் ஏற்படும், நீ தாங்கிக் கொள்வாயா? என்பது போல கர்ப்பிணி முன்பு பேசவே கூடாது. இது அவர்களை மனதளவில் பெரிதாய் பாதிக்கும்.

கேள்வி 2 ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதிரி வயிறு வெளியே தெரியும். அதற்காக வயிறு மிகவும் சிறியதாய் இருப்பது போல தெரிகிறது, மருத்துவரிடம், குழந்தை ஆரோக்கியமாக தான் இருக்கிறதா என கேளு. என்பது போல பேச வேண்டாம். மாதா மாதம் பரிசோதிக்கும் மருத்துவர் அதை கூறிக் கொள்வர். நீங்கள பயமுறுத்த வேண்டாம்.

கேள்வி 3 முடியாது, கடினம், தோல்வி, நஷ்டம் என்பது போல எப்போதும் கர்ப்பிணி முன்பு பேச வேண்டாம். கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறான வார்த்தைகளை மட்டுமே கேட்கும் போது அதன் குணாதிசயங்கள் மாறுபட வாய்ப்பிருக்கிறது.

கேள்வி 4 வயிறு பெரிதாய் இருந்தால் ஆண், இல்லையென்றால் பெண் என நீங்களாக எதையும் கொளுத்தி போட வேண்டாம். இதுப் போன்ற ஆசைகள் அதிகரித்து, பிறகு வேறு குழந்தை பிறக்கும் போது மனதளவில் பெண் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன.

கேள்வி 5 சாப்பாடு விஷயத்துல ரொம்ப கஷ்டமா இருக்கா, பரவலா கொஞ்ச நாள் தான் என கூறி, அவர்களது ஏக்கத்தை அதிகரிக்க வேண்டாம். இதுவும் கர்ப்பிணி பெண்களின் மனதை பாதிக்கவல்லது.

பலருக்கும் தெரியாத ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள்!!!

By     No comments:

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள். அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், உடை, தலைமுடி, நடை என்று கூறுவார்கள். இவை அனைத்தும் நம் கண்களுக்கு புலப்படும் வெளிப்படையான வேறுபாடுகள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உளவியல் ரீதியான வேறுபாடுகள்!!! ஆனால் அதையும் தாண்டி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உடல் வித்தியாசங்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் போல்ட்ஸ்கை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொழுப்பு சேரும் இடம் பொதுவாக ஆண்களுக்கு கொழுப்புக்களானது வயிற்றில் சேரும். அதனால் தான் பெண்களை விட ஆண்கள் தொப்பையால் கஷ்டப்படுகின்றனர். அப்படியெனில் பெண்களுக்கு கொழுப்புக்கள் எங்கு சேரும் என்று கேட்கலாம். பெண்களுக்கு கொழுப்புக்களானது தொடை மற்றும் இடுப்பின் பின்பகுதியில் சேரும். மேலும் ஆண்களை விட பெண்களின் தொடை பெரியதாக இருப்பதற்கு காரணமும் இதுவே.

இதய துடிப்பு இதய துடிப்பு என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் இதய துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். அதில் ஆண்களுக்கு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறதெனில், பெண்களுக்கு 80 முறை துடிக்கும்.

செல்கள் வேறுபடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள செல்களும் வேறுபடும். இதற்கு காரணம் அவர்களின் குரோமோசோம்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரத்த சிவப்பணுக்கள் ஆண்களை விட பெண்களின் ரத்தத்தில் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் பெண்களின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும். இதன் காரணமாக பெண்கள் அடிக்கடி இரத்த சோகைக்கு உள்ளாகின்றனர்.

நுரையீரல் ஆண்களை விட பெண்களின் நுரையீரல் சிறிதாக இருக்கும். அதில் ஆண்களின் நுரையீரலானது பெண்களின் நுரையீரலை விட 30 சதவீதம் பெரியதாக இருக்கும். இதனால் தான் ஆண்களை விட பெண்கள் எதிலும் விரைவில் சோர்வடைகின்றனர்.

தலை, தண்டுவடம், கால்கள் அதேப் போல் பெண்களை விட ஆண்களின் தலை, தண்டுவடம் மற்றும் கால்கள் போன்றவை பெரியதாக இருக்கும்.

வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால் வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால் ஆகிய மூன்றும் பெண்களை விட ஆண்களுக்கு சிறிதாக இருக்கும்.

பற்கள் பற்கள் என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் பற்கள் வலிமை குறைவாக இருக்கும். சொல்லப்போனால் பொக்கை வாய் தாத்தாக்களை விட, பொக்கை வாய் பாட்டிகள் தான் உலகில் அதிகம்.

ஆக்ஸிஜன் அளவு ஆண்களை விட பெண்களின் உடலில் ஆக்ஸிஜன் சற்று குறைவாக இருக்கும். இதற்கு காரணமும் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது தான். சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. அது குறைவாக இருக்கும் போது, பெண்களால் கூட்டம் நிறைந்த இடங்களில் நீண்ட நேரம் இருக்க முடியாமல் மயங்கி விழுகின்றனர்.

ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழங்களை உட்கொண்டால் உயிரை இழக்கக்கூடும்?

By     No comments:

அன்றாடம் இரவில் படுக்கும் முன் பலரும் சாப்பிடும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அத்தகைய வாழைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. அதிலும் பொட்டாசியம் தான் அதிக அளவில் வாழைப்பழத்தில் உள்ளது. இச்சத்து இதயம், ரத்தம், நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். 12 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு நம்ப முடியாத வகையில் மாறிய அதிசய பெண்! ஆனால் ஒரு நாளில் வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உயிரை இழக்கக்கூடும் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது. எனவே பலரும் வாழைப்பழத்தை சாப்பிட பயன்படுகின்றனர். அதிலும் ஒரு நாளைக்கு 6 வாழைப்பழத்தை உட்கொள்ளலாம், 7 ஆவது பழத்தை உட்கொண்டால், உயிரை இழக்கக்கூடும் என்று நம்புகின்றனர். ஆனால் இது குறித்து சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது. அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

400 வாழைப்பழம் உயிரைக் குடிக்கும் அளவில் எனில் சுமார் 400 வாழைப்பழங்களை ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டாலும், அதில் உள்ள முழு பொட்டாசியமும் நேரடியாக சிறுநீரகங்களைத் தாக்கினால் மட்டுமே உயிரிழக்கக்கூடும்.

குடல் தடுக்கும் ஆனால், வாழைப்பழத்தை சாப்பிடும் போது, பாதி வழியிலேயே பாதி பொட்டாசியத்தை குடல் உறிஞ்சிவிடும். எஞ்சிய பொட்டாசியம் தான் சிறுநீரகங்களுக்குச் செல்லும். எனவே 400 பழங்களை ஒரே நேரத்தில் உட்கொண்டாலும் மரணம் ஏற்படப் போவதில்லை என்று லண்டனில் இருக்கும் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த காத்தரின் கொலின்ஸ் என்னும் உணவுமுறை நிபுணர் கூறியுள்ளார்.

கதிரியக்க விஷம் வாழைப்பழத்தைக் குறித்து மற்றொரு மூடநம்பிக்கை மக்களிடையே உள்ளது. அது என்னவெனில், வாழைப்பழத்தால் கதிரியக்க விஷம் பரவுகிறது என்பது தான்.

கதிரியக்க விஷம் குறித்து கேத்தரின் கூறுவது... ஒவ்வொருவரின் உடலிலும் கதிரியக்கம் உள்ளது என்று கூறுவதோடு, வாழைப்பழத்தினால் கதிரியக்க விஷம் பரவுவதற்கு ஒருவர் ஒரு வேளைக்கு 10 லட்சம் வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கிறார்.

ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள் அதுமட்டுமின்றி, கேத்தரின் ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள் வீதம் தொடர்ந்து ஏழு வருடங்கள் உட்கொண்டு வந்தால் தான், உடலில் கதிரியக்க விஷம் ஏற்பட்டுள்ள அறிகுறிகளே தென்படும் என்கிறார். எனவே, எவ்வித பயமும் இல்லாமல் ஒரு நாளைக்கு எவ்வளவு வாழைப்பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.

முளைக்கட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? கூடாதா?

By     No comments:

பலருக்கும் மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு பிரியர்கள், அதனை எப்படி சமைத்தாலும் சாப்பிட்டுவிடுவார்கள். இத்தகையவர்கள் வீட்டில் எப்போதுமே உருளைக்கிழங்கு இருக்கும். ஆனால் அப்படி மொத்தமாக வீட்டில் வாங்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளைக்கட்டினால், அதை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று தெரியாது. 10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க! இது குறித்து அகமதாபாத்தை சேர்ந்த உணவுமுறை மற்றும் ஊட்டச்ச்சத்து நிபுணர் டாக்டர், ஸ்வாதி விளக்கம் அளித்துள்ளார். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சர்க்கரை அளவு உயர்வு முளைக்கட்டிய உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் நன்கு முற்றிய உருளைக்கிழங்கு மென்மையாக இருப்பதற்கு, அதில் உள்ள கார்போஹைட்ரேட் சர்க்கரையாக மாற்றமடைந்திருப்பது தான்.

பச்சை உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் தோல் பச்சையாக இருந்தாலும், அதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் அந்த அல்கலாய்டுகள் இருக்கும். ஒருவேளை நீங்கள் வாங்கிய உருளைக்கிழங்கில் பச்சை நிறத்தோல் இருந்தால், அப்பகுதியை நீக்கிவிடுங்கள்.
ஆய்வு முடிவு பொதுவாக முளைக்கட்டியது ஆரோக்கியமானது என்ற கருத்து இருப்பதால், இதுக்குறித்து ஆய்வு ஒன்றில் பரிசோதிக்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் முளைக்கட்டிய உருளைக்கிழங்கின் தோல் நன்கு பிரஷ்ஷாக இருந்தால், அதில் உள்ள முளைக்கட்டியதை மட்டும் நீக்கிவிட்டு சாப்பிடலாம் என்று தெரியவந்துள்ளது. ஏனெனில் வலிமையுடன் இருக்கும் உருளைக்கிழங்கில் ஊட்டச்சத்துக்ள் அப்படியே இருக்குமாம். ஆனால் அதுவே சுருங்கிவிட்டால், அதன் முழுச்சத்துக்கள் நீக்கிவிடுவதால், அதனை தூக்கி எறிந்துவிட வேண்டுமாம்.

உருளைக்கிழங்கு முளைக்கட்டாமல் இருக்க சில டிப்ஸ்... * உருளைக்கிழங்கில் 78% நீர்ச்சத்து இருந்நதால், இது 5-7 மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஆனால் அதனை குளிர்ச்சியான, கருமையான மற்றும் காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். * உருளைக்கிழங்கை ஈரப்பதமிக்க இடத்தில் வைத்து பராமரித்தால், முளைக்கட்டுவதோடு, விரைவில் கெட்டுப் போகவும் கூடும்.

குறிப்பு ஏன் உருளைக்கிழங்கை மொத்தமாக வாங்கி முளைக்கட்டும் வரை வீட்டில் வைக்கிறீர்கள்? அதை கொஞ்சமாக வாங்கி, அவ்வப்போதே சமைத்து சாப்பிட்டால், எதற்கு இப்பிரச்சனையெல்லாம் வரப்போகிறது. எனவே பிரஷ்ஷாக வாங்கி, சமைத்து சாப்பிட்டு, அதன் முழுப்பலனையும் பெறுங்கள்.

P. Vasu: Children will not know parents' sufferrings until they make their mark

By     No comments:



உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

By     No comments:

உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் ஒன்று தான் இரும்புச்சத்து. இந்த இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தால், அதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் பலரும் பெண்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர். இரத்த வகைகளும்... அதற்கான சரியான டயட்டும்... சரி, இரும்புச்சத்து ஏன் இன்றியமையாதது என்று தெரியுமா? பொதுவாக இது ஹீமோகுளோபினின் முக்கியமான பகுதி.
அதுமட்டுமின்றி, இதுதான் நுரையீரல் மற்றும் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது. இதில் குறைபாடு ஏற்பட்டால், உடல் செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்படும். இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள்!!! சரி, இப்போது உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
மூச்சுவிடுவதில் சிரமம் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், ஒன்று நுரையீரல் பிரச்சனையாக இருக்கும் அல்லது இரும்புச்சத்து குறைபாடாக இருக்கும்.

அதிகப்படியான இரத்தப்போக்கு மாதவிடாய் காலத்தில் இரத்தப் போக்கு அளவுக்கு அதிகம் ஏற்பட்டால், அதற்கு காரணமும் இரும்புச்சத்து குறைபாடு தான். எனவே மாதவிடாய் காலத்தில் எண்ண முடியாத அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை சந்தியுங்கள்.

வெளிரிய சருமம் கன்னங்கள், உதட்டின் உள்ளே மற்றும் கண் இமைகளுக்கு அடிப்பகுதியில் உங்கள் சருமம் வெளிரிப் போயிருந்தால், மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஏனெனில் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் தான் அவை.
ஐஸ், சாக்பீஸ், களிமண் போன்றவை சில குழந்தைகள் சாக்பீஸ், பேப்பர் அல்லது களிமண் சாப்பிடுவதை கண்டிருப்பீர்கள். இதற்கு காரணம் இரும்புச்சத்து குறைபாடு தான். இக்குறைபாட்டினால் தான் இப்பழக்கங்களைப் பின்பற்ற நேரிடுகிறது. இது நம்பமுடியாதவாறு இருந்தாலும், அது தான் உண்மை.
தலைவலி நீங்கள் கடுமையான தலைவலியை பல நாட்களாக உணர்ந்து வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டினால் உங்கள் மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை என்று அர்த்தம். எனவே நீங்கள் அடிக்கடி தலைவலியால் கஷ்டப்பட்டால், மருத்துவரை உடனே சந்தியுங்கள்.

பதற்றம் பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படக்கூடும். ஆனால் பதற்றமானது நரம்புகளினால் ஏற்படுவது. நீங்கள் சமீப காலமாக அதிகமாக பதற்றமடைந்தால், உங்களின் இரும்புச்சத்தின் அளவை பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் உங்கள் இதயம் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததால், வேகமாக துடித்து, அதனால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பதற்றம் ஏற்படுகிறது.

முடி உதிர்தல் முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், இரும்புச்சத்து குறைபாடும் ஓர் முக்கிய காரணமாகும். நீங்கள் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருதுந்தால், உங்கள் முடி அதிகமாக உதிர்வதை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி, இது நீடித்தால், நாளடைவில் வழுக்கைத் தலை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஹைப்போ தைராய்டு உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்பட்டு, அதனால் ஹைப்போ தைராய்டு ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.

உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு - அமெரிக்க ஆய்வில் தகவல்

By     No comments:

அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்... அதன் நன்மைகளும்... ஆனால் இக்காலத்தில் அந்த பழைய சோறு என்னும் கஞ்சி சாப்பிடுவதற்கு வழியே இல்லை. ஆம், தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் இரவில் கூட டிபன் தான் சமைக்கப்படுகிறது. அப்படி இருக்க, எப்படி பழைய சோற்றினை சாப்பிட முடியும். அதுமட்டுமின்றி, பலரது வீடுகளில் காலையில் பழைய சோற்றுக்கு மாற்றாக இட்லி, தோசை, பூரி, சப்பாதி, நூடுல்ஸ் போன்றவை வந்துவிட்டதால், பழைய சோற்றினை மறந்துவிட்டோம். காலை உணவை ஏன் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா...? இங்கு அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வில் கண்டறிந்தவைகளையும், பழைய சோற்றினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செரிமானம் மேம்படும் பழைய சோற்றில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

வைட்டமின்கள் அதிகம் பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன. இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

முதுமை தடுக்கப்படும் தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம். நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழைய சோற்றினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள்.
எலும்புகள் வலிமையடையும் முக்கியமாக பழைய சோற்றினை சாப்பிடுவதால், இக்காலத்தில் பலரும் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

உடல் சூடு தணியும் நீங்கள் உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டால், பழைய சோறு சாப்பிடுங்கள். ஏனெனில் இதனை உட்கொண்டால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியுடன் இருக்குமாம்.

மலச்சிக்கல் பழைய சோற்றில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இரத்த அழுத்தம் தற்போது பலருக்கும் உள்ள இரத்த அழுத்தத்தை பழைய சோறு கட்டுப்படுத்துமாம். எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பழைய சோற்றினை காலை உணவாக எடுத்து வாருங்கள்
அல்சர் இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.
சம்பா அரிசி/கைக்குத்தல் அரிசி பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது. ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.

குறிப்பு நம் முன்னோர்கள் எந்த ஒரு பழக்கத்தையும் காரணமின்றி பின்பற்றமாட்டார்கள். மேலும் நம் முன்னோர்கள் ஆரோக்கியம் என்று கூறினால் அதை மறுக்கும் நாம், வெளிநாட்டினர் ஆராய்ந்து, ஆச்சரியப்பட்டு கூறினால் உடனே ஒப்புக் கொள்வோம். இப்போது நம் பழைய சோற்றை அவர்கள் ஆரோக்கியம் என்று கூறுகிறார்கள். இப்போதாவது பழைய சோற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த பழைய சோற்றினை தினமும் உட்கொள்ள முடியாவிட்டாலும், வாரத்திற்கு மூன்று முறையாவது உட்கொள்ளுங்கள்.

Srushti Dange walks the ramp for Hari Anand at CIFW 2015

By     No comments:



Friday, 18 September 2015

'I am Narendra Modi's daughter' | 'Avani Modi' Exclusive Talk

By     No comments:



Thirumalai Thirupathi Jukebox - Songs of Perumal - Tamil Devotional Songs

By     No comments:


நாயைக் காப்பாற்ற விமானத்தை திசை திருப்பிய இரக்கமுள்ள விமானி (வீடியோ)

By     No comments:

விமானத்தில், குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு நாயைக் காப்பாற்றுவதற்காக விமானைத்தையே திசை திருப்பிய விமானியைப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.



விமானம் ஒன்று, இஸ்ரேலில் இருந்து கனாடவில் உள்ள டொரண்டோ நகருக்கு 200 பயணிகளுடன் பயணித்தது. அப்போது அதில் பயணித்த, புல்டக் இனத்தைச் சேர்ந்த சிம்பா என்ற 7 வயது நாய்க்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. விமானத்தில் உள்ள வெப்பமூட்டும் கருவி செயல்படாத காரணத்தால் சிம்பாவின் உடல் நடுங்கத் தொடங்கியது. அதன் உடல் நிலையும் மோசமானது.

இதை அறிந்த விமானி, உடனடியாக விமானத்தை வேறு திசைக்கு திருப்பி, ஜெர்மனி நாட்டின் விமான நிலையத்தில் இறக்கினார். அதோடு சிம்பாவை வேறொரு விமானத்தில் எற்றி பத்திரமாக அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைத்தார். இதனால் ரூ. 10,000 டாலர் மதிப்புள்ள பெட்ரோல் செலவானது. அதோடு விமானம் 75 நிமிடம் தாமதமானது. இருந்தாலும் அதில் பயணித்த பயணிகள் கோபப்படவில்லை. மாறாக இரக்கமுள்ள விமானியை எல்லோரும் பாராட்டினர்.

இதை அறிந்த, அந்த நாயின் உரிமையாளர் “என் நாய் எனக்கு குழந்தை மாதிரி. அதுதான் எனக்கு எல்லாம். என் செல்ல நாயின் உயிரைக் காப்பாற்றிய அந்த விமானிக்கு என் நன்றி” என கண்ணிர் மல்க கூறினார்.


உயிருக்கு போராடியவரை காப்பாற்ற 20 அடி பாலம் உயரத்திலிருந்து குதித்த இளம் காவலர்(வீடியோ)

By     No comments:

நாசிக் நகரில் நடந்து வரும் கும்ப மேளாவில் 24 வயதான ஒரு இளம் காவலர் ஒரு மனிதனின் உயிரை காப்பாற்ற 20 அடி உயரமான பாலம் ஒன்றிலிருந்து தண்ணீரில் குதித்து அந்த உயிரை காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

மனோஜ் பரகடே என்னும் இந்த இளம் காவலர் நாசிக் நகரில் நடந்து வரும் கும்ப மேளாவில் பாதுகாப்புக்கு போடப்பட்ட காவலர்களில் ஒருவர், இவர் 20 அடி உயரமான பாலத்திலிருந்து தண்ணீரில் குத்தித்து உயிருக்கு போராடிய ஒருவரின் உயிரை காப்பாற்றி எந்த வித ஆரவாரமும் இல்லாமல் இருக்கிறார்.

24 வயதான அந்த காவலர் நேற்று அமர்தம் பாலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு மனிதர் பாலத்திலிருந்து தண்ணீரில் குதித்ததை பார்த்துள்ளார். மனோஜ் மற்றும் அவருடன் பணியில் இருந்த பிற காவலர்கள் அவரை தடுத்தும் அவர் குத்தித்துள்ளார், இதனால் அவரின் உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சற்றும் யோசிக்காமல் மனோஜ் 20 அடி உயரத்திலிருந்து குதித்து அவரை காப்பாற்றியுள்ளார்.


பயிற்சி காவலரான மனோஜ் பின்னர் கூறுகையில், அவர் தண்ணீரில் குதித்த பிறகு அவரிடம் இருந்து எந்த அசைவும் தெரியவில்லை, மேலும் அவரை காப்பாற்றுவதற்கு இதை தவி வேறு வழி இல்லை என்று தோன்றியது. அதனால் குதித்துவிட்டேன் என்று அவர் கூறினார்.

ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ஆணையர் பிரவீன் கேடம் டிவிட்டரில் மனோஜின் படத்தை போட்டு இளம் காவலரின் துணிச்சல், அவருக்கு சல்யூட் என பாராட்டியுள்ளார்.


தேசிய தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கம் வென்றனர்

By     No comments:

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த காயத்ரி மற்றும் பிரேம்குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.





தேசிய சீனியர் தடகளப் போட்டியில் மகளிர் பிரிவில் நடைபெற்ற 100மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில், தமிழக வீராங்கனை காயத்ரி முதலிடம் பிடித்தார். 14.16 நொடிகளில் தனது இலக்கையை கடந்து தங்கம் பதக்கத்தை வென்றார்

ஆடவருக்கான 110 மீட்டர் தடையோட்டத்தில், சுரேந்தர் இரண்டாவது இடம் பிடித்தார். ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், ரயில்வே அணியின் சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரேம்குமார் தங்க பதக்கம் வென்றார். அவர் 7.74 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார்.

காதல் ஜோடிகளை பிடித்துவைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல் (வீடியோ)

By     No comments:

உத்திரகாண்ட் மாநிலத்தில், ஒரு காதல் ஜோடியை பிடித்து வைத்து, பணம் கேட்டு மிரட்டி கும்பலைப் பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



உத்திரகாண்ட் மாநிலம், காஷிபுர் எனும் ஊரில் உள்ள, துமாரியா அணைப்பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டிருந்த, முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, பணம் பறிக்கும் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொண்டது.

அதில் ஒருவன் தன் முகத்தை கைக்குட்டையால் மூடியுள்ளான். இன்னொருவன் தன் முகத்தை காட்டவில்லை. அந்தக் கும்பலிடம் மாட்டிக்கொண்ட அந்த ஜோடி செய்வது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறது. அந்த வழியாக வந்த ஒரு பெரியவரிடம் உதவி கேட்கிறது அந்த ஜோடி. ஆனால் ரூ.1000 கொடுத்தால்தான் அவர்களை விடுவிப்போம் என்கிறது அந்தக் கும்பல்.

சம்பந்தப்பட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.



கள்ளக் காதலியை பார்க்கப் போய் ஏழாவது மாடியில் ஏசியில் சிக்கிக்கொண்ட வாலிபர்

By     No comments:

சீனாவில் ஒருவர், தன் கள்ளக்காதலியை சந்திக்கப் போன போது, காதலியின் கணவர் வந்து விட்டதால், ஒரு இரவு முழுவதும், இரண்டு ஏர் கண்டிஷனர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின், புஜியான் மாகாணம் ஷிஷி என்ற நகரைச் சேர்ந்த இளைஞர், திருமணனான தன் காதலியியை சந்திக்கச் சென்றிருக்கிறார். காதலியிடம் ஜாலியாக இருந்தபோது, வெளியூர் போன காதலியின் கணவர் திடீரென வந்துவிட்டார்.

பயந்து போன அந்த வாலிபர், அவசர அவசரமாக ஆடைகளையெல்லம் போட்டுக்கொண்டு, அங்கிருந்து தப்பிக்க இடம் தேடியிருக்கிறார். அப்போது அவர் கண்ணில் பட்டது ஒரு ஜன்னல். அது வழியே தப்பிக்கலாம் என நினைத்து வேகமாக அந்த வழியில் நுழைந்துவிட்டார். ஆனால், அவரால் முழுதாக வெளியே வரமுடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது அவர் மாட்டிக்கொண்டிருப்பது இரண்டு ஏர் கண்டிஷனர்களுக்கு இடையில் என்று.

பிறகென்ன, அப்படியே இரவு முழுவதும் இருந்திருக்கிறார். மறுநாள் விடிந்து, காதலியின் கணவர் காலையில் வெளியே சென்ற பிறகு, தன் காதலனின் நிலையை பார்த்துப் பதறிய காதலி, உடனடியாக தீயனைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்.

தீயணைப்பு விரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். முதலில் யாரோ ஒருவர் மாட்டிக்கொண்டிருக்கிறார் என்றுதான் அந்தப்பெண் தகவல் கொடுத்திருக்கிறார். பிறகுதான் தெரிந்திருக்கிறது அவர்களின் உண்மைக் கதை.

லெஸ்பியன் உறவிற்கு எதிர்ப்பு: இரு பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

By     No comments:

லெஸ்பியன்' உறவுக்கு, கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், சேலம் அருகே இளம் பெண்கள் இருவரும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.




சேலம், தின்னப்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில், இரு இளம்பெண்களின் சடலம் இருப்பதாக நேற்று, சேலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று இரு பெண்களின் சடலத்தை கைப்பற்றி, பிரே பரிசோதணைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை, அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தியதில், சேலம் அருகே அன்னதானப்பட்டியில், காயத்ரி வீட்டின் அருகே ஜான்சிராணி குடும்பத்தார் 7 ஆண்டுக்கு முன் குடியேறிய இருந்தனர், அப்போது, காயத்ரியும்,ஜான்சிராணி இடையே இணைப்பிரியா தோழிகளாக இருந்துள்ளனர். மேலும், இரவு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் இவர்கள் ஒன்றாகவே இருந்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு, ஜான்சிராணிக்கு, தங்கதுரை என்பவருடன், திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், இவர்களுடைய நட்பு மேலும் அதிகமானது. இந்நிலையில் இருவரும் தினமும் காலையில், வீட்டைவிட்டு வெளியேறி சென்று, மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஜான்சிராணி, நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர் 'அவளுடன் பேசக்கூடாது,சந்திக்கவும் கூடாது' என, கண்டித்துள்ளார்.

இதே போல் காயத்திரி பெற்றோரும் கண்டித்துள்ளனர். ஆனால் ஜான்சிராணியும், காயத்திரியும் மாற்றி கொள்ளவில்லை. இதனால் விரக்திடைந்த தோழிகள் கடந்த, 16ஆம் தேதி இருவரும், ஒகேனக்கல் சென்று வீடு திரும்பும் போது, நேற்று முன்தினம் இரவு, தின்னப்பட்டிக்கு அருகே, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இருவரும், லெஸ்பியன் செக்ஸ் உறவு வைத்திருப்பதை கண்டித்ததால் தான் தற்கொலை செய்து கொண்டனர் என்று இரு வீட்டார் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதை உறுதிப்படுத்த சரியான ஆதரங்கள் இல்லை என்பதால் தற்கொலை செய்து கொண்ட தோழிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமிங்கிலத்தின் மீது ஜாலியாகப் பயணம் செய்த கடல் நாய்

By     No comments:

ஒரு திமிங்கலத்தின் முதுகின் மீது கடல் நாய் ஒன்று பயணம் செய்யும் அரிய காட்சியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் படமெடுத்துள்ளார்.

திமிங்கலத்தின் முதுகில் கடல் நாயின் ஜாலி ரைட்


நியூசவுத் வேல்ஸ் கடற்கரையில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு என்கிறார்கள் விலங்கின நிபுணர்கள்.

ராபின் மால்கம் என்ற அந்த புகைப்படக் கலைஞர் சிட்னிக்குத் தெற்கே சில திமிங்கிலங்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

ஜாலி பயணத்தின் சற்றே நெருக்கமான தோற்றம்

அந்தப் புகைப்படங்களை மீண்டும் பார்த்தபோதுதான், திமிங்கிலத்தின் மீது கடல் நாய் பயணம் செய்யும் அரிய காட்சியும் தன் கேமராவில் பதிவாகியிருப்பது அவருக்குத் தெரிந்தது.

இம்மாதிரி ஒரு விலங்கு மற்றொரு விலங்கின் முதுகில் எதிர்பாராதவிதமாக பயணம் செய்யும் நிகழ்வு இவ்வருட ஆரம்பத்திலும் புகைப்படமாக எடுக்கப்பட்டது.

மரங்கொத்தியின் முதுகில் மரநாய் பயணம் செய்த காட்சி
மார்ச் மாதத்தில் மரங்கொத்தியின் முதுகில் மரநாய் பயணம் செய்த காட்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மார்ச் மாதத்தில் கிழக்கு லண்டனில் உள்ள ஹார்ன்சர்ச் பகுதியில் ஒரு மரங்கொத்தியின் முதுகில் மரநாய் ஒன்று பயணம் செய்யும் காட்சியை மார்டின் லே மே என்பவர் புகைப்படம் எடுத்தார்.

ஃப்ளோரிடாவில் முதலையின் மீது பயணம் செய்யும் ரக்கூன்

ஜூன் மாதத்தில் மத்திய ஃப்ளோரிடாவில் உள்ள காட்டில் நடந்து சென்ற ஒரு குடும்பத்தினர், முதலையின் மீது ரக்கூன் ஒன்று பயணம் செய்யும் காட்சியை படமாக எடுத்தனர்.

அந்த முதலை தண்ணீருக்குள் மூழ்குவதற்கு முன்பாக அந்த ரக்கூன் இறங்கி ஓடிவிட்டதாக படத்தை எடுத்த ராபர்ட் ஜோன்ஸ் தெரிவித்தார்.

காதலனின் பிறப்பு உறுப்பில் சூடுபோட்ட காதலிக்கு 9 மாதம் சிறை

By     No comments:

முன்னாள் காதலியுடன் இரவில் தங்கியதால், காதலனின் பிறப்பு உறுப்பில் சூடுவைத்த இளம்பெண்ணிற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 9 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் அடி­லெயிட் மாகாணத்தின் மேற்­குப் பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் பார்க்கர் பகுதியைச் சேர்ந்த புரான்வென் ஜாய் பார்க்கர் (22) என்ற இளம்பெண், தனது காதலர் அவ­ர­து ­முன்னாள் காத­லி­யுடன் இரு இர­வு­களைக் கழித்­த­தை­ அறிந்து கோபமடைந்துள்ளார்.

இதனால், இருவருக்குமிடையே கடும் வாக்­கு­வா­தத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளம்பெண், தலைமுடியை நேராக்­கு­வ­தற்குப் பயன்­படும் உப­க­ர­ணத்தால் காத­லரின் பிறப்­பு­றுப்பை சுடப் போவ­தாக கூறி­யுள்ளார். தனது காத­லியின் கோபத்தைத் தணிக்க வேறு வழி தெரி­யாத காதலர் அதற்கு சம்­ம­தித்­துள்ளார்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் அளித்துள்ள புகாரில், காதலி வைத்த சூட்டால் பிறப்­பு­றுப்பில் தீக்காயம் ஏற்­பட்­டுள்ள­துடன், அதன் செயல் திறனும் பாதிக்­கப்­பட்டுள்ளதாக காதலர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது குறித்து நீதிமன்றத்தில் விளக்­க­ம­ளித்த ஜாய் பார்க்கர், தனது காத­லரின் செயலினால் ஆத்திரமடைந்ததாகவும், அதனால் அவ­ருக்கு எச்­ச­ரிக்கை செய்யவே அவ்வாறு செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது இவ்வளவு தூரம் விப­ரீ­த­மாக போய் முடியும் என்று தான் நினைக்­க­வில்லை எனவும் தெரி­வித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி மஸ்கட், இளம்பெண்ணுக்கு 9 மாத சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.