Showing posts with label recipes. Show all posts
Showing posts with label recipes. Show all posts

Thursday, 17 September 2015

பிடி கொழுக்கட்டை: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

By     No comments:


கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிடி கொழுக்கட்டை. பலரும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பல வகையான கொழுக்கட்டைகளை செய்து படைக்க விரும்புவார்கள்.

நீங்கள் அப்படி விரும்புபவர்களானால், இந்த வருடம் பிடி கொழுக்கட்டையையும் செய்யுங்கள். இங்கு அந்த பிடி கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1/2 கப்

வெல்லம் - 1/4 கப்

தண்ணீர் - 1 மற்றும் 1/4 கப்

துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை எண்ணெய் - சிறிது

செய்முறை: முதலில் வெல்லத்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடவும். பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும். ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அனைத்து, குளிர வைக்க வேண்டும்.

மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி!!!


Wednesday, 16 September 2015

ஓட்ஸ் கொழுக்கட்டை

By     No comments:

டயட்டில் இருப்போர் அதிகம் பயன்படுத்தும் ஒரு உணவுப் பொருள் தான் ஓட்ஸ். இந்த ஓட்ஸ் பலருக்கு பிடிக்காது. இதற்கு காரணம் அது பிசுபிசுவென்று இருப்பது தான். ஆனால் இந்த ஓட்ஸை பலவாறு சமைத்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? அதிலும் அப்படி வித்தியாசமாக சமைக்கும் ஓட்ஸ் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

இங்கு ஓட்ஸைக் கொண்டு எப்படி கொழுக்கட்டை செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். குறிப்பாக இது மாலையில் ஸ்நாக்ஸ் போன்று செய்து சாப்பிட மட்டுமின்றி, காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளக்கூடியவாறு இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 1/4 கப்

தண்ணீர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது வரமிளகாய் - 2

செய்முறை: முதலில் ஓட்ஸை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

நீரானது நன்கு கொதித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு இட்லி தட்டில் மற்றும் கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, அதனை கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்து, பின் இந்த தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஓட்ஸ் கொழுக்கட்டை ரெடி!!!


வெல்லம் பால் கொழுக்கட்டை

By     No comments:

வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை (mineral salts) உள்ளடக்கியது. இதை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் சங்க காலத்தில் இனிப்பு உணவு வகைகளைத் தயாரிக்க வெல்லத்தையே பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும், "வெல்லம்" தொண்டை மற்றும் நுரையீரல் சம்பந்தப் பட்ட நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் பயன்படுத்தப் படுவது குறிப்பிடத் தக்கது. வெல்லம், பால் சேர்த்து செய்த கொழுக்கட்டை சுவையோடு சத்தானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 1 கப்

எண்ணெய் - 3 டீ ஸ்பூன்

காய்ச்சிய பால் - 1 கப்

வெல்லம் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்

சுக்குப் பொடி - 1/2 டீ ஸ்பூன்

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

வெல்லப்பாகு செய்முறை வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கொழுக்கட்டை செய்முறை இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும். அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும்.

கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், குறைந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும். வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும்.

கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.


Tuesday, 15 September 2015

பிடி கொழுக்கட்டை: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

By     No comments:

கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிடி கொழுக்கட்டை. பலரும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பல வகையான கொழுக்கட்டைகளை செய்து படைக்க விரும்புவார்கள்.

நீங்கள் அப்படி விரும்புபவர்களானால், இந்த வருடம் பிடி கொழுக்கட்டையையும் செய்யுங்கள். இங்கு அந்த பிடி கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1/2 கப்

வெல்லம் - 1/4 கப்

தண்ணீர் - 1 மற்றும் 1/4 கப்

துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை எண்ணெய் - சிறிது

செய்முறை: முதலில் வெல்லத்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடவும். பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அனைத்து, குளிர வைக்க வேண்டும். மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி!!!