பிரான்ஸ் நகரின் வடமேற்கு பகுதியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு பெண்கள் அரை நிர்வாணமாக மேடையேறி போராட்டம் நடத்தினர்.
பிரான்சின் வடமேற்கு பாரிசில் முஸ்லீம்கள் மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டில் பல முஸ்லீம் அறிஞர்களும், பேச்சாளர்களும் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு பெண்கள் மேலாடையின்றி மேடையேறி வந்து, அவர்களிடமிருந்து மைக்கைப் பிடுங்கி கோஷமிட ஆரம்பித்தனர்.
பின்னர், உடனடியாக விரைந்து வந்த பாதுகாவலர்கள் அப்பெண்களை அங்கருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். அப்போது மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் அப்பெண்களில் ஒருவரை உதைத்தனர்.
அரை நிர்வாணமாக போராட்டம் நடத்திய பெண்கள் இருவரின் பெயரும் தெரியவில்லை. இவர்கள் இருவரில் ஒருவருக்கு 25 வயதும் மற்றொருவருக்கு 31 வயதிருக்கும் என கூறப்படுகிறது.
இவர்கள் தங்களது உடலில், “நாங்கள் எங்களது வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்வோம். வேறு யாரும் தீர்மானிக்க முடியாது” என்று எழுதி வைத்திருந்தனர்.
இவர்களைப் பற்றியான உறுதியான தகவல் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை எனினும், இவர்கள் இருவரும் 2008ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த பெண்ணிய அமைப்பு, தங்களை ஒத்துக்கொள்ளாத அரசுக்கு எதிராக அல்லது வேறு அமைப்புகளுக்கு எதிராக நிர்வாணமாக போராட்டம் நடத்தும் அமைப்பாகும்.
இந்த மாதிரியான போராட்டங்கள் இவர்களுக்கு புதிதல்ல. இதற்கு முன்னதாக, இந்த ஆண்டு ’மே தின’ விழாவின் போது வலதுசாரி தலைவர் மரைன் லீ பென் நாஜிகளின் சின்னத்தை தூக்குப் பிடித்தமைக்காக அந்த மேடையிலும் இதே போன்று அரை நிர்வாணமாக ஏறி போராட்டம் நடத்தியுள்ளனர்.
வீடியோ கீழே: