ஜெயகாந்தன் தனது கைப்பட வைரமுத்துக்கு எழுதிய கடைசிப் பாராட்டுக் கடிதத்துக்கு பிறகு கொஞ்சநாள் வைரமுத்துவை பற்றி எந்த சேதியும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கவிஞர் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளார். நோபலை எப்படியும் வாங்கியே தீருவது என்ற அவரது முயற்சி தொடர்கிறது.
முதல்கட்டமாக அவரது நாவலை 23 மொழிகளில் மொழிப்பெயர்க்கிறார்கள். அக்டோபர் மாதம் வைரமுத்து சிறுகதைகள் என்ற பெயரில் தனது சிறுகதைகளை வெளியிடுகிறார். பிரமாண்டமாக நடக்கும் இந்த விழாவுக்கு பிரபலங்களை அழைக்கும் பணியில் கவிஞர் பிஸி.
நடிகர் கமலை நேரில் சந்தித்த வைரமுத்து, விழாவுக்கான அழைப்பிதழை அவரிடம் தந்தார்.
அக்டோபர் பத்து, விழா நடக்கும் அன்று சென்னை டிராபிக்கால் ஸ்தம்பிக்கலாம்.