இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். இதையடுத்து தமிழக மீனவர்கள் 16 பேரும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பிரதமரின் இந்திய பயணத்தின்போது, முக்கியமாக தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் இலங்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.