குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பயணம் செய்த விமானத்தின் ஓடுபாதையில் பன்றிகள் கூட்டம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்போது குடியசுத் தலைவர் சென்ற போயிங் 737 ரக விமானம் தரையிறங்கியது. பின்பு அந்த விமானம் ஓடுபாதையில் ஓடி நின்ற போது, வழியில் 8 பன்றிகள் கொண்ட கூட்டம் புகுந்து ஓடியது. இதனால், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, விமானத்துறை உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.