சென்னை கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் டி.பி சத்திரம் ரோட்டில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் ஏஞ்சல் தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கீழ்பாக்கம் டி.பி சத்திரம் ரோட்டில் நள்ளிரவில் திடீரேன வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது வானத்தில் உருவம் ஒன்று தெரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அந்த உருவம் பார்ப்பதற்கு “ஏஞ்சல்” தோற்றம் போல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்தனர். மேலும், அப்பகுதியில் சிலர் வாகனங்களை நிறுத்திவிட்டு வானத்தை நோக்கி அதிசயத்திடன் அந்த ஏஞ்சலை பார்த்து விட்டு சென்றனர். மேலும் அப்பகுதி கிறிஸ்தவர்கள், கடவுள் உதித்ததாக நம்பி அந்த இடங்களில் வழிபட ஆரம்பித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் சிறப்பு வழிபாடும், ஜெப கூட்டங்களும் நடைபெற்றதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியதாக தெரிவிக்கின்றனர்.