சகாரா நிறுவனத்த்தின் அங்கீகாரத்தை மத்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்துள்ளது.
சகாரா நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். முதலீட்டாளர்களுக்கு உரிய நேரத்தில் அசல் மற்றும் வட்டியை சகாரா நிறுவனம் வழங்கவில்லை.
இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்த வழக்கில் சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சகாரா நிறுவனத்தின் அங்கீகாரத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. இந்த உத்தரவு செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.