விநாயகர் சதுர்த்தி நாளான இன்று ரஜினிகாந்த் நடிக்கும் "கபாலி" படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று காலையில் சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான முதல் ரசிகர்கள் மத்தியில் மட்டும்மின்றி அனைத்து சமூக வலைதளங்களிலும் ஆக்கிரமித்து பரபரப்பையும் ஏற்படுத்தியது. மற்றோரு பாட்ஷா படமாக அமையும் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். கபாலி படம் இளைஞர்கள் கூட்டணியில் ஆரம்பமாக உள்ளதால் புது எனர்ஜியுடன் ரஜினி இந்த படத்தில் நடிக்கிறார்.
மெட்ராஸ் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த ரஞ்சித் கபாலி படத்தை தன்னுடைய ஸ்டைலில் இயக்கவுள்ளார் என்றும் முள்ளும் மலரும் படத்தில் நடித்த காளி ரஜினியை மனதில் வைத்து கபாலியை இயக்க உள்ளேன் என்று அவர் தெரிவித்தார். மேலும் இப்படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் அமைக்கிறார், இப்படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார்.
இன்று காலை 9 மணிக்கு "கபாலி" படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பூஜை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் தொடங்கியது என்றும் இதில் ரஜினி உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். சால்ட்-பெப்பர் ஸ்டைலில் கருப்பு கோட் அணிந்து ஸ்டைலாக ரஜினி நடந்து வந்த காட்சி முதல் ‘ஷாட்’ ஆக படமாக்கப்பட்டது. முதல் ஷாட் முடிந்ததும் சூப்பர் ரஜினியை இயக்குனர் ரஞ்சித், கலைப்புலி தாணு உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னையில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்து உள்ளனர். மீதமுள்ள காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழுவினர் மலேசியா செல்லவுள்ளனர்