மதுரையில் பாஜக நிர்வாகி வேல்முருகனை தமிழக போலீசார் கைது செய்துள்ள சம்பவத்திற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, முஸ்லீம் மக்களின் புனித இடமான மெக்காவில் உள்ள மசூதியில் ஏற்பட்ட விபத்தில் 100 க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்திற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், ஃபேஸ்புக்கில், தமிழக பாஜக தொழில்நுட்பப்பிரிவு நிர்வாகியான, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வேல்முருகன் பதிவு செய்து இருந்தார்.
இந்த தகவலை கண்ட ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் மூலம் ஆவேம் அடைந்தனர். மேலும், இந்த தகவலை திருமங்கலத்திலுள்ள முஸ்லிம்களுக்கு தெரிவித்தனர். இது குறித்து, திருமங்கலத்தை சேர்ந்த அஜ்மிர் அலி என்பவர் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில், வேல்முருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்தனர். சர்ச்சைக்குறிய அந்த கருத்து, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை பாஜக நிர்வாகி வேல்முருகன் ஃபேஸ்க்கில் சில கருத்துக்களை முன்வைத்தார். அந்த கருத்துக்களுக்காக அவரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
சைபர் கிரைம் குற்றங்களில், கைது செய்யும் அதிகாரம் போலீசாருக்கு இல்லை என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. அது தெரியாமல் அவரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக போலீசாரின் செயல் கண்டனத்திற்கு உரியது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சுயசரிதையில் திப்புசுல்தானின் உண்மை நிலை விளக்கப்பட்டுள்ளது. அந்த சுய சரிதையை அதிமுக சரியாக படிக்காமல், அவருக்கு திண்டுக்கல்லில் மணிமண்டபம் கட்டுவதாக கூறியுள்ளது. இதுவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.
மேலும், மக்கள் நம்பிக்கையான விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்கள் விழாக்களுக்கு போலீசார் தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும் என்றார்.