வாய் நாம் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய ஒரு அங்கம். அதில் ஏதாவது வலிகள், சிரமங்கள் வந்தால் பல்வேறு சங்கடங்கள் ஏற்ப்படும். பிறரிடம் பழகும்போது எப்போதும் ஒரு தயக்கம் இருக்கும். அப்படி வாயில் ஏதாவது பிரச்சனைகள் வந்தால் அதை சரிசெய்ய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்.
உதடு வெடிப்பு, வாய்ப்புண் பலருக்கு எப்பவாது வரும் சிலருக்கு அடிக்கடி வரும் ஆனால் அது வந்தால் சாப்பிடுவது பேசுவது நீர் அருந்துவது போன்றவற்றில் மிகவும் சிரமமாக இருக்கும், இதிலிருந்து விடுபட சில ஆலோசனைகள்.
1.மருதாணி இலைகளை ஊறவைத்து கஷாயமாக காய்த்து வாய்கொப்பளித்தால் வாய்ப்புண், தொண்டைப்புண் பிரச்சனை நீங்கிவிடும்.
2.250மிலி நீரில் அரைதேக்கரண்டி மாதுளம்பூச்சூரணம் சேர்த்து காய்ச்சி அந்த நீரை வாய்கொப்புளித்தால் வாய்ப்புண், தொண்டைப்புண் வலி நீங்கும்.
3.வசம்பை நெருப்பில் சுட்டி அதை தாய்ப்பாலில் உரைத்து நாவில் தடவி வந்தால் பேச்சுத்தடுமாற்றம், வாயில் நீரொழுகல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
4.மணத்தக்காளி இலைகளை மென்று அதன் சாறை விழுங்கி வந்தால் வாய்ப்புண் குணமாகும், மேலும் மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
5.ஒரு கையளவு நெல்லி இலைகளை நன்றாக கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
6.காலையில் அகத்திக்கீரை கொழுந்தை வாயில் போட்டு மென்று தின்றால் 3 நாளில் வாய்வேக்காடு நீங்கும்.
7.முளைகட்டிய பச்சைபயிரை காலையில் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும்.
8.தினமும் ஒருவேளை நன்னாரி பாகுவை 5 முதல் 10 மிலி அருந்தி வந்தால் வாய்ப்புண் சரியாகும்.
9.கொய்யா இலைகளை மென்று பல் தேய்த்து வந்தால் பல்வலி,வாய்ப்புண் குணமாகும்.
10.ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், வாய்துர்நாற்றம் நீங்கும்.
11.ஆலம்பாலை காலை மாலை தடவி வர வாய்ப்புண், உதடு, நாக்குவெடிப்பு, கைகால் வெடிப்பு, பல் ஆட்டம் சரியாகும்.