Wednesday, 16 September 2015

சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய அனுமதி: வரைவு தேர்தல் அறிக்கை பாமக வெளியீடு

By     No comments:



சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பாமக வெளியிட்ட 2016 சட்டசபை தேர்தலுக்கான வரைவு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2016 சட்டசபை தேர்தலுக்கான வரைவு தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

வரைவு தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

* கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும். மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும்.

* மருத்துவம் தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். பா.ம.க. ஆட்சி அமைந்தபின் முதலமைச்சர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் ஆணையில்தான்.

* முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். * தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார். புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி 3 வாரங்களில் வழங்கப்படும்.

* தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் நியாய விலை பல்பொருள் அங்காடிகள் திறக்கப்படும். இவற்றில் அனைத்துப் பொருட்களும் அடக்க விலைக்கே விற்பனை செய்யப்படும்.


* சென்னையில் மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும். கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்படும்.

* தமிழகம் உண்மையாகவே மின்மிகை மாநிலமாகும் வகையில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மின் கட்டணங்கள் குறைக்கப்படும்.

* 60 வயதான அனைவருக்கும் மாதம் ரூ.2000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக அவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அரசிடம் உள்ள ஆவணங்களின் படி இவர்கள் அடையாளம் காணப்பட்டு உதவி வழங்கப்படும்.

* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

* சென்னையில் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை 8 ஆயிரம் ஆக உயர்த்தப்படும். சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

* சென்னையில் மிதிவண்டிப் போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வரைவு தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :