தமிழகத்தில் 5 இடங்களில் புதிதாக ஐ.டி.ஐ. தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தமிழக சட்ட சபையில் நேற்று, 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில், தற்போது 77 ஐ.டி.ஐ.,க்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், பொறியியல் மற்றும் பொறியியல் சாராத பிரிவுகளில், 28 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர்.
தமிழகத்தில், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், தொாழில் கல்வி விரிவுபடுத்தப்படும் வகையிலும், 5 புதிய ஐ.டி.ஐ. தொடங்க தமிழக முடிவு செய்தள்ளது.
அதன்படி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, விருதுநகர் மாவட்டம் சாத்துார், பெரம்பலுார் மாவட்டம் ஆலந்துார், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகிய இடங்களில் ஐ.டி.ஐ -க்கள் தொடங்கப்படும். மேலும், இந்த புதிய ஐ.டி.ஐயில் சுமார் 1,000 பேர் தங்கிப் படிக்கும் வகையில் சுமார் ரூ. 46 கோடி செலவில் விடுதிகள் கட்டப்படும் என்றார்.