Saturday 19 September 2015

உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு - அமெரிக்க ஆய்வில் தகவல்

By     No comments:


அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்... அதன் நன்மைகளும்... ஆனால் இக்காலத்தில் அந்த பழைய சோறு என்னும் கஞ்சி சாப்பிடுவதற்கு வழியே இல்லை. ஆம், தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் இரவில் கூட டிபன் தான் சமைக்கப்படுகிறது. அப்படி இருக்க, எப்படி பழைய சோற்றினை சாப்பிட முடியும். அதுமட்டுமின்றி, பலரது வீடுகளில் காலையில் பழைய சோற்றுக்கு மாற்றாக இட்லி, தோசை, பூரி, சப்பாதி, நூடுல்ஸ் போன்றவை வந்துவிட்டதால், பழைய சோற்றினை மறந்துவிட்டோம். காலை உணவை ஏன் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா...? இங்கு அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வில் கண்டறிந்தவைகளையும், பழைய சோற்றினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செரிமானம் மேம்படும் பழைய சோற்றில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

வைட்டமின்கள் அதிகம் பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன. இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

முதுமை தடுக்கப்படும் தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம். நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழைய சோற்றினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள்.
எலும்புகள் வலிமையடையும் முக்கியமாக பழைய சோற்றினை சாப்பிடுவதால், இக்காலத்தில் பலரும் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

உடல் சூடு தணியும் நீங்கள் உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டால், பழைய சோறு சாப்பிடுங்கள். ஏனெனில் இதனை உட்கொண்டால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியுடன் இருக்குமாம்.

மலச்சிக்கல் பழைய சோற்றில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இரத்த அழுத்தம் தற்போது பலருக்கும் உள்ள இரத்த அழுத்தத்தை பழைய சோறு கட்டுப்படுத்துமாம். எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பழைய சோற்றினை காலை உணவாக எடுத்து வாருங்கள்
அல்சர் இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.
சம்பா அரிசி/கைக்குத்தல் அரிசி பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது. ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.

குறிப்பு நம் முன்னோர்கள் எந்த ஒரு பழக்கத்தையும் காரணமின்றி பின்பற்றமாட்டார்கள். மேலும் நம் முன்னோர்கள் ஆரோக்கியம் என்று கூறினால் அதை மறுக்கும் நாம், வெளிநாட்டினர் ஆராய்ந்து, ஆச்சரியப்பட்டு கூறினால் உடனே ஒப்புக் கொள்வோம். இப்போது நம் பழைய சோற்றை அவர்கள் ஆரோக்கியம் என்று கூறுகிறார்கள். இப்போதாவது பழைய சோற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த பழைய சோற்றினை தினமும் உட்கொள்ள முடியாவிட்டாலும், வாரத்திற்கு மூன்று முறையாவது உட்கொள்ளுங்கள்.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :