பாலிவுட் நடிகரின் மனைவி, தன் கணவரின் நண்பரையே இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக எழுந்த செய்தி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன், சூசன்னே கான் என்பவரை 2000ம் ஆண்டு காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பதிமூன்று ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு எற்பட்டு கடந்த 2013ம் ஆண்டு விவாகரத்திற்கு விண்ணப்பித்தனர்.
ரித்திக் ரோஷனின் நண்பர் மற்றும் நடிகருமான அர்ஜுன் ராம்பலுக்கும், சூசன்னேக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
ரித்திக்கை பிரிந்த பிறகு, சூசன்னே, அர்ஜூன் ராம்பலுடன் நெருங்கி பழகுவதாகவும், அதனால் ராம்பலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை எழுந்து, அவர்களும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அனுகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், ராம்பல் இதை மறுத்துள்ளார்.
அப்படியென்றால் சூசன்னேக்கும், ஹிரித்திக் ரோசனின் நண்பருக்கும் இடையேதான் தொடர்பு என்றால், அந்த நபர் யார்? என்ன? என்பது பற்றி தெரியவில்லை.