சென்னை - மதுரை துரந்தோ ரயில் சேலத்தில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மதுரைக்கு சென்னை சென்ட்ரல்-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22205) ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜனவரி (2016) மாதம் 4ஆம் தேதி முதல் சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதிகாலை 2.55 மணிக்கு சேலம் வந்தடையும். அதிகாலை 3.05 மணிக்கு மதுரை நோக்கி புறப்படும்.
அதே போன்று, மறுமார்க்க்தில், மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில், மதுரை-சென்னை சென்ட்ரல் துரந்தோ எக்பிரஸ் (22206) ரயில் மதுரையில் இரவு 10.45 மணிக்கு புறப்படும், அதிகாலை 2.20 மணிக்கு சேலம் வந்தையும். அங்கிருந்து 2.30 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.