விமானத்தில், குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு நாயைக் காப்பாற்றுவதற்காக விமானைத்தையே திசை திருப்பிய விமானியைப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
விமானம் ஒன்று, இஸ்ரேலில் இருந்து கனாடவில் உள்ள டொரண்டோ நகருக்கு 200 பயணிகளுடன் பயணித்தது. அப்போது அதில் பயணித்த, புல்டக் இனத்தைச் சேர்ந்த சிம்பா என்ற 7 வயது நாய்க்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. விமானத்தில் உள்ள வெப்பமூட்டும் கருவி செயல்படாத காரணத்தால் சிம்பாவின் உடல் நடுங்கத் தொடங்கியது. அதன் உடல் நிலையும் மோசமானது.
இதை அறிந்த விமானி, உடனடியாக விமானத்தை வேறு திசைக்கு திருப்பி, ஜெர்மனி நாட்டின் விமான நிலையத்தில் இறக்கினார். அதோடு சிம்பாவை வேறொரு விமானத்தில் எற்றி பத்திரமாக அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைத்தார். இதனால் ரூ. 10,000 டாலர் மதிப்புள்ள பெட்ரோல் செலவானது. அதோடு விமானம் 75 நிமிடம் தாமதமானது. இருந்தாலும் அதில் பயணித்த பயணிகள் கோபப்படவில்லை. மாறாக இரக்கமுள்ள விமானியை எல்லோரும் பாராட்டினர்.
இதை அறிந்த, அந்த நாயின் உரிமையாளர் “என் நாய் எனக்கு குழந்தை மாதிரி. அதுதான் எனக்கு எல்லாம். என் செல்ல நாயின் உயிரைக் காப்பாற்றிய அந்த விமானிக்கு என் நன்றி” என கண்ணிர் மல்க கூறினார்.