நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ளது.
இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷின் மரணம் சிதம்பர ரகசியமாக மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வந்தது.
நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட்டால் அண்டை நாடுகளுடனான அயல் நாட்டுக் கொள்கை பாதிக்கப்படும் என்று கூறி ஆவணங்களை வெளியிட மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் நேதாஜி தொடர்பான 64 கோப்புகள் உள்ளடக்கிய 12 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை 18 ஆம் தேதி ( இன்று ) வெளியிடப்போவதாக மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேதாஜி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உள்ளடக்கிய சி.டி.யை மேற்குவங்க அரசு இன்று காலை வெளியிட்டுள்ளது.
மேற்குவங்க காவல்துறை மியூசியத்தில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும் இந்த ஆவணங்களை ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த ஆவணங்கள் நேதாஜி குடும்பத்தாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.