முதலுதவி, அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது. அவசர நிலைகளில் ஓர் நாள் உங்களுக்கே கூட இது உதவும். ஆனால், இதை சரியாக தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தவறான முதலுதவி முறைகள், ஆபத்தான விளைவுகளை தரக்கூடியது.
பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்பாடு, புற்றுநோயை ஏற்படுத்துமா? - அதிர்ச்சி!!! பொதுவாக நாம் செய்யும் சில அவசர முதலுதவிகளில் தவறான முறைகளை கையாள்கிறோம். அதில் நாம் செய்யும் தவறுகள் என்ன அதனால் என்ன விளைவுகள் ஏற்படலாம் என்பதை குறித்து இனிக் காணலாம்...
உராய்வுகள், வெட்டு காயங்கள் உங்கள் விரல் அல்லது கை, கால்களில் உராய்வுகள் அல்லது காய்கறி வெட்டும் போது, வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், உடனே அவ்விடத்தில் ஐஸ் வைக்க வேண்டாம்.
முதலில் ஈரமான துணியை வைத்து அவ்விடத்தை கட்டவும். துணி நன்கு ஈரமாக இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நன்கு துடைத்த பிறகு, அந்த இடம் வீன்காமல் இருக்க ஐஸ் பேக் பயன்படுத்துங்கள். இம்முறை பாக்டீரியாக்கள் தோற்று ஏற்படாமல் தவிர்க்க உதவும்.
பல் உடைந்தால் அடிபட்டு பல் உடைந்துவிட்டால் உடனே அந்த இடத்தை அழுத்தம் தர வேண்டாம். இரத்தம் வரமால் அல்லது வலிக்காமல் இருக்க பதமாக கைகளை வைத்து இலகுவாக அழுத்தம் தரலாம். முக்கயமாக உடைந்த பல்லை பாலில் போட்டு வைக்கவும். இதனால் உடைந்த அந்த பல்லை மீண்டும் அதே இடத்தில ஒட்டவைக்க முடியும்.
தீக்காயங்கள் தீக்காயம் ஏற்பட்டவுடன், காயம் ஏற்பட்ட இடத்தில பால் அல்லது வெண்ணெய்யை சில எரிச்சல் இல்லாமல் இருக்க பயன்படுத்துவார்கள். இது தவறான அணுகுமுறையாகும். அதே போல, தீக்காயம் ஏற்பட்டால் ஃபைபர் துணிகள் வைத்து போத்த வேண்டாம், இது தோலோடு ஒட்டிக்கொள்ளும். சிறு, சிறு தீக் காயங்கள் என்றால், கழுவிய பிறகு அன்டி-பயாடிக் பயன்டுத்தி மருத்துவமனைக்கு கூட்டி செல்லுங்கள்.
எலக்ட்ரிக் தீக்காயங்கள் எலக்ட்ரிக் தீக்காயங்கள் வெளியில் காண்பிக்கும் காயங்களை விட உள்ளே பெரிய பாதிப்புகள் ஏற்படுத்த கூடியது ஆகும். எனவே, நீங்களாக சிறிய காயம் என கருதாமல் உடனே மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வேண்டியது அவசியம்.
கணுக்கால் சுளுக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டால், காலை உதறுவது தவறு. சிலர் உடனே காலை நன்கு உதற கூறுவார்கள். அவ்வாறு செய்ய வேண்டாம். இது, தசை பிசைவு ஏற்படவும், வலி அதிகமாகவும் காரணமாகிவிடும்.
சுளுக்கு ஏற்பட்ட இடத்தில ஐஸ் வையுங்கள் இது, வீக்கம் பெரிதாகாமல் தடுக்கும். சரியான மருத்துவரை அணுகி வைத்தியம் செய்வது தான் சுளுக்கை சரிசெய்ய தகுந்த முறையாகும்.
மூக்கில் இரத்தம் வழிதல் மூக்கில் இரத்தம் வழியும் போது, உடனே பின்னோக்கி படுக்க கூறுவார்கள் இது இரத்தம் வழிதலை குறைக்கும் என கூறுவார்கள், ஆனால் இவ்வாறு செய்ய கூடாது.
நேராக அமர்ந்து தலையை மட்டும் மேல்நோக்கி நிமிர்த்தி வைக்க வேண்டும். இலகுவாக இரத்தம் வழியும் மூக்கின் பக்கம் அழுத்தம் தாருங்கள். 10-15 நிமிடத்திற்குள் இரத்தம் நின்றுவிடும். அப்படி இல்லை என்றால், மருத்துவமனைக்கு உடனே கூட்டி செல்லுங்கள்.
விஷம் விஷம் அருந்தினாலோ அல்லது தெரியாமல் உண்டுவிட்டதாக நினைத்தாலோ உடனே வாந்தி எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனால் எந்த பயனும் ஏற்பாடு போவதில்லை. எனவே, உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது தான் உடனடி தீர்வு தரும்.
வலிப்பு வலிப்பு ஏற்படும் போது, நன்கு காற்று வரும் படி நோயாளிக்கு இடம் விட வேண்டும். அவர்களது வாயில் உணவோ, நீரோ ஏதும் ஊட்ட வேண்டாம். வலிப்பு அதிகமாவது போல் இருந்தால் உடனடியாக மருத்தவமனைக்கு கூட்டி செல்ல வேண்டியது அவசியம். காக்கா வலிப்பாக இருந்தால் இரும்பு பொருளை கையில் கொடுத்து அழுத்தமாக பிடிக்கும் படி செய்யலாம்.