ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லைப்படை அதிகாரி உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரஜூரி மாவட்டத்தில் உள்ள மன்ஞ்சகோட்டி என்ற இடத்தில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 82 மில்லி மீட்டர் நீளமுள்ள 2 மோட்டார் ரக குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.
இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த சோகன்லால் என்ற உதவி காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு புதுடெல்லியில் நடைபெற்ற எல்லைப்பாதுகாப்பு படை இயக்கநர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை இயக்குநர் கலந்து கொண்டார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய எல்லைப் பகுதிகள் மீது மோட்டார் ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அவர் உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.