ஓய்வில் இருக்கிறார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். கவுண்டமணியை சந்தித்து உரையாடியவர் அடுத்து அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக அஜித் மாறிக் கொண்டிருக்கிறார். அதிகம் அலட்டிக் கொள்ளாத அவரது இயல்புதான் அஜித்தின் பிளஸ்.
வாயில் வெற்றிலை போட்டிருப்பவர்கள் புத்திசாலியாக தெரிவார்கள் என்று கமல் ஒருமுறை சொன்னார். அதற்கான காரணத்தையும் அவரே விளக்கினார். வெற்றிலை வாயில் இருந்தால் அதிகம் பேச முடியாது. எது கேட்டாலும் பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டுவார்கள். இந்த மௌனம் அவர்களை அழுத்தக்காரர்களாகவும், அதிகம் தெரிந்த புத்திசாலிகளாகவும் காட்டும் என்றார்.
அஜித்தும் அதிகம் பேச மாட்டாரா... அவர் எது சொன்னாலும் பொன்மொழிதான் மற்றவர்களுக்கு. அண்ணன், அப்பா சொல்லித்தர வேண்டிய விஷயங்களை அஜித் என்னிடம் பேசினார். அவர் சொன்னவற்றை கடைபிடித்தால் பெரிய நடிகனாவேனோ இல்லையோ நல்ல மனிதனாவேன் என்று சிவகார்த்திகேயன் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
வள்ளுவர் முதல் வள்ளலார்வரை பெரியவர்கள் சொன்னதைவிட அதிகம் அப்படி என்னதான் தல சொல்லியிருப்பார்?