துருக்கி கடலில் மூழ்கி நான்கு குழந்தைகள் உட்பட, 22 பேர் பலியான சம்பவர்ம் துருக்கியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ். தீவிரதிகளினால் ஏற்பட்ட உள் நாட்டுப் போர் காரணமாக, சிரியா நாட்டைச் சேர்ந்த மக்கள் அருகிலுள்ள நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்வது தொடர் கதையாகி வருகிறது. இதில் பலர் கடல் வழியே செல்லும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இப்படி சொல்லும் போதுதான், அய்லன் என்ற 5 வயது சிறுவன் கடற்கரையில் இறந்து கிடந்த சம்பவம் உலக நாடுகளின் நெஞ்சத்தையெல்லாம் சமீபத்தில் உலுக்கியது.
இப்போது அதேபோல் ஒரு துயர நிகழ்ச்சி இன்று(15.09.2015) துருக்கியின் தென்மேற்கு கடற்கரையில் நடந்துள்ளது. துருக்கியில் உள்ள தாட்சா எனும் ஊரில் இருந்து ஏராளமானோர் ஒரு சிறிய கப்பலில் இருந்து கிரேக்க தீவை நோக்கி புறப்பட்டனர்.
அப்போது அவர்கள் வந்த கப்பல், கடலில் மூழ்கியது. இதில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 22 பேர் உயிரழந்தனர். உடனே அங்கு மீட்புக்குழு விரைந்து 211 பேரை காப்பற்றியது. இன்னும் யாராவது கடலில் இருக்கிறார்களா என மீட்புக்குழுவினர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அளவுக்கு மீறி, ஏராளமானவர்களை கப்பலில் ஏற்றி வந்ததே இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.