Monday 14 September 2015

விடுதி ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பாலிவுட் நடிகை

By     No comments:


சர்ச்சைகளுக்கு பெயர் போன பிரபல பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா விடுதி ஊழியர்களை தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

வழக்கறிஞர், மாடலிங், நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் பூஜா மிஸ்ரா. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸிலும் பூஜா மிஸ்ரா ஜொலித்து வருகிறார்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் பூஜா இந்தி நடிகை சோனாக்ஷி சின்கா தனக்கு எதிராக சதி செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.


இந்த புகார் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார் பூஜா மிஸ்ரா. மும்பையில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய பூஜாவை ஒரு ஹோட்டல் மேனேஜ்மென் மாணவர் தனது செல்போனில் படம்பிடிக்கிறார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மிஸ்ரா அந்த செல்போனை பறித்து கீழே போட்டு உடைக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை பல முறை பலமாக மிஸ்ரா தாக்குகிறார். இந்த வீடியோவை இணையதளத்தில் இதுவரை 15 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ள பூஜா மிஸ்ரா, விடுதிக்கு வரும் வாடிக்கையாளரிடம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விடுதி நிர்வாகம் கற்றுத் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :