Thursday 17 September 2015

ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள்!

By     No comments:


பெரும்பாலான இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் அலுமினிய பாத்திரங்கள். இந்த பாத்திரங்களைத் தான் பலரும் தங்களின் வீடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அலுமினிய பாத்திரத்தில் உணவை சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது தெரியுமா?

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்!!! ஆம், அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால், சமைக்கும் உணவில் அலுமினியம் கலந்துவிடுகிறது. பின் அவற்றை உட்கொள்ளும் போது, அவை இரத்த நாளங்கள் வழியே சில உறுப்புக்களில் தங்கி, ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைக்கு காரணம், அதில் உள்ள அயனிகள் அல்லது மின்துகள்கள் தான்.

இந்த அயனிகள் மூளைக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். தொடர்ச்சியாக அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், நாளடைவில் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பணத்தையும் நேரத்தையும் சேமித்திட சில அதிமுக்கிய சமையலறை ரகசியங்கள்!!! அதுமட்டுமின்றி, அலுமினியம் சிறுநீரகங்களுக்கும் கேடு விளைவிக்கும். சரி, இப்போது அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போமா!!!

நரம்பு மண்டலம் அலுமினிய பாத்திரங்களால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இதற்கு அதில் உள்ள மின்துகள்கள் தான் காரணம். இதனால் தான் அல்சைமர் நோய் ஏற்படுகிறது.

ஞாபக மறதி அலுமினிய பாத்திரங்கள் மனித மூளையைத் தான் தாக்கும். அதிலும் தொடர்ந்து அலுமினிய பாத்திரங்களைக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வந்தால், அதனால் மூளை நோய்கள் மற்றும் ஞாபக மறதி போன்றவை ஏற்படும்.

அதிகப்படியான சோர்வு தொடர்ச்சியான அலுமினிய பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டு வந்தால், ஒரு கட்டத்தில் திடீரென்று அதிகப்படியான சோர்வை சந்திக்கக்கூடும். சோர்விற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவ பரிசோதனை சோதனையை மேற்கொண்டால், அதற்கு காரணமாக இருப்பது அலுமினிய பாத்திரங்களாகத் தான் இருக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ் அலுமினியம் எலும்பின் வளர்ச்சியைத் தடுத்து, அதில் அதிகப்படியான தேய்வை ஏற்படுத்தி, அதிகமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தும்.

சிறுநீரகங்கள் அலுமினியம் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பெருங்குடல் பாதிக்கப்படுவதோடு, அதனைத் தொடர்ந்துசிறுநீரகங்களும், இரத்தமும் பாதிக்கப்படும்.

புற்றுநோய் அலுமினியம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று எவ்வித ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எப்படி பெருங்குடல் பாதிக்கப்படுமோ, அதேப்போல் அதிகப்படியான பாதிப்பின் காரணமாக பெருங்குடல் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது.

எதற்கு இந்த வீண் வம்பு, எது ஆரோக்கியமான சமையல் பாத்திரம் என்று தெரிந்து அவற்றைப் பயன்படுத்தி வாருங்களேன்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேண்டுமெனில் அலுமினிய பாத்திரங்களுக்கு சிறந்த மாற்றாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தலாம். அலுமினிய பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களால் ஏற்படும் பாதிப்பு குறைவே.

மண் பாத்திரங்கள் இருப்பதிலேயே எவ்வித பக்கவிளையும் இல்லாத ஒரு வகையான பாத்திரம் தான் மண் பாத்திரங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, சமைக்கும் போது உணவின் சுவையும் அதிகரிக்கும்.


busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :