Friday 18 September 2015

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட முஸ்லீம் மாணவரை விருந்திற்கு அழைத்த ஒபாமா

By     No comments:


வாஷிங்டன்: கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பள்ளி மாணவர் அகமது முகமதுவை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார் அதிபர் ஒபாமா. அகமது முகமதுவை சந்திக்க விரும்புவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் அகமது முகமது. சூடான் வம்சாவளியைச் சேர்ந்த அகமதுவிற்கு அறிவியலில் ஆர்வம் மிக அதிகம். இதன் எதிரொலியாக பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக கடிகாரம் ஒன்றைச் செய்து அதனை தனது வகுப்பு ஆசிரியரிடம் பெருமையாக காட்டியுள்ளான் அகமது. ஆனால், அதனை வெடிகுண்டு எனத் தவறுதலாக புரிந்து கொண்ட ஆசிரியர், உடனடியாக பள்ளிக் காவலரை அழைத்துள்ளார்.

கைது... அவரும் உடனடியாக அகமதுவை கைது செய்து இரு கைகளுக்கும் விலங்கிட்டுள்ளார். இதனால் சகமாணவர்கள் மத்தியில் அகமது அவமானப்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அணு இணைவு உலை... கடந்தாண்டு அணு இணைவு உலையை உருவாக்கியதற்காக சிறுவன் ஒருவன் பாராட்டுகலைப் பெற்றான். வெள்ளை இன சிறுவனுக்கு கிடைத்த அங்கீகாரம் முஸ்லீம் இனச் சிறுவனுக்கு இல்லையா என சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

ஹாஷ்டேக்... அப்பாவி மாணவர் அகமதுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் #IStandWithAhmed எனும் ஹாஷ்டேகை உருவாக்கி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இணையவாசிகள் மட்டும் அல்லாமல் விஞ்ஞானிகள் உள்ளிட்டோரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பிரபலங்களின் பாராட்டு... அதனைத் தொடர்ந்து சிறுவன் அகமதுவிற்கு அமெரிக்காவில் ஆதரவு பெருகத் தொடங்கியுள்ளது. அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் மார்க், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் மற்றும் பொதுமக்கள் அகமதுவிற்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளை மாளிகைக்கு வாருங்கள்... இது தொடர்பாக ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "நீங்கள் செய்த கடிகாரம் மிகவும் அருமை. அதை அதிபர் மாளிகைக்கு எடுத்து வர விருப்பமா? உங்களைப் போன்ற சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்து வருவதால்தான் அமெரிக்கா மாபெரும் நாடாக உள்ளது" எனப் பாராட்டியுள்ளார்.

ஆசிரியரின் தவறு... இது குறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில், "மாணவர் அகமது கைது விவகாரம், அவரது ஆசிரியர்கள் செய்த தவறால் நிகழ்ந்ததாகும். இது மிகவும் வருத்தத்துக்கு உரிய சம்பவம்.

இது ஒரு படிப்பினை... இனியும் இதுபோல் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ள இந்தச் சம்பவத்தை அனைவரும் ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த மாதம் அதிபர் மாளிகையில் நடைபெறும் விண்வெளி அறிஞர்களுக்கான விருந்தில் கலந்து கொள்ள அகமது முகமதுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்" என்றார்.

விண்வெளி அறிஞர்கள் விருந்து... அதிபர் மாளிகையில் நடைபெறும் விண்வெளி அறிஞர்கள் விருந்தில், மாணவர்கள் கலந்து கொண்டு அறிவியல் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வது வழக்கமாகும்.

பாராட்டப்பட வேண்டும்... இதேபோல், பேஸ்புக் நிறுவனர் மார்க் வெளியிட்டுள்ள பதிவில், "புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வமும், கனவும், லட்சியமும் கொண்டவர்கள் பாராட்டப்பட வேண்டும் மாறாக கைது செய்யப்படக் கூடாது.

ஆர்வம்... அகமது, பேஸ்புக் தலைமையகத்திற்கு வர விரும்பினால், நான் உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். கண்டுபிடிப்புகளை தொடருங்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.




busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :