Tuesday 15 September 2015

திருமணத்திற்கு முன்பு நடக்கும் மருதாணி நிகழ்வு பற்றிய உண்மையான தகவல்கள்!!

By     No comments:


இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் புனிதமான மற்றும் தூயதாக்கப்பட்ட சடங்காக கருதப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு, திருமணம், திருமணத்திற்கு பின்னான சடங்கு என பல வகையான சடங்குகளை திருமணங்கள் கொண்டுள்ளதால், இவைகள் மிகவும் நீள மற்றும் விரிவான சடங்குகளாகும்.

திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மருதாணி நிகழ்வாகும். குதூகலம் நிறைந்த இந்த நிகழ்வு, பெரும்பாலும் மணமகளின் வீட்டில் தான் கொண்டாடப்படும்.

நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தங்களின் திருமண பழக்கங்கள், சடங்குகள் மற்றும் பண்பாடுகளின் படி, இந்த சடங்கை வெவ்வேறு மாதிரி கொண்டாடி வருகின்றனர். மேலும் தங்களின் வசதி மற்றும் மதிப்பை பொறுத்து, அதற்கேற்ப இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.

மருதாணி நிகழ்வு மணமகளின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை ஒன்று சேர்த்து மணமகளை ஆசீர்வாதம் செய்யவும், கேளிக்கைக்காகவும் தான் மணமகளின் குடும்பம் இந்த மருதாணி நிகழ்வை கொண்டாடுகிறது.

வீடு அல்லது ஹோட்டல் பெரும்பாலும் இந்த நிகழ்வு மணமகளின் வீட்டில் அல்லது ஏதேனும் ஒரு ஹோட்டலில், திருமண நாளுக்கு முந்தைய நாள் இரவு அல்லது திருமண நாளுக்கு சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படும். இந்த நிகழ்வின் போது, மணமகளின் கைகள் மற்றும் கால்களுக்கு, தொழில் ரீதியான மருதாணி டிசைனர் ஒருவர் அல்லது சில உறவினர்கள் மருதாணி போட்டு விடுவார்கள்.

அக்கா அல்லது தங்கை இந்தியாவில் சில இடங்களில் மணமகளின் கணவராக வரப் போகிறவரின் அக்கா அல்லது தங்கை தான் மணமகளுக்கு இந்த நிகழ்வின் போது முதலில் மருதாணியை போடுவார். சில இடங்களில் மணமகளின் தாயார் மருதாணியை முதலில் போட்டு விட்டால், அது மங்களகரமாக கருதப்படுகிறது.

மணப்பெண் தண்ணி கணவனிடம் தன்னை அர்பணித்தல் மருதாணி போடுவது என்பது மணமகளை அலங்கரிப்பதற்காக மட்டுமல்ல. மாறாக கன்னிப்பெண்ணாக இருக்கும் மணப்பெண் தன் கணவனிடம் தன்னை அர்பணிப்பதற்காக மேற்கொள்ளும் மாற்றத்தை இது உருவாக்கப்படுத்துகிறது.

காமசூத்ராவின் படி காமசூத்திராவின் படி, மருதாணி என்பது பெண்களின் 64 கலைகளில் ஒன்றாகும். சங்கு, பூக்கள், கலசம், மயில், டோலி போன்றவைகள் தான் மணமகளுக்கு வைக்கப்படும் புகழ்பெற்ற மருதாணி வடிவங்கள் ஆகும். மணமகளுக்கு போடப்பட்டிருக்கும் சிக்கலான மருதாணி டிசைனுக்கு மத்தியில் மணமகனின் பெயரும் கூட ஒளிந்திருக்கும்.

கணவனின் பெயர் பொதுவாக மருதாணிக்கு மத்தியில் கணவன் பெயரை கண்டுபிடிக்க முடியாத படி போடப்படுவது, மணமகன் அதனை கண்டுப்பிடிப்பதற்காகவே. இது அவருடைய கண் பார்வையையும் முனைப்பான அறிவாற்றலையும் காட்டும்.

இதனால் மணமகள் ஈர்க்கப்படுவார் அல்லவா? பொதுவாக மருதாணி விழாவுடன் சேர்த்து சங்கீத் நிகழ்ச்சியும் இடம் பெரும். மருதாணி சடங்கின் போது மரபு ரீதியான பாடல்களுக்கு பெண்கள் ஆடியும் பாடியும் கொண்டாடுவதால், இது கிட்டத்தட்ட ஒரு திருவிழா உணர்வையே உண்டாக்கி விடும்.

வெளிறிய நிற ஆடைகளுடன் மிதமான நகைகள் இந்த நிகழ்வின் போது வெளிறிய நிற ஆடைகளுடன் மிதமான நகைகள் அணியப்பட்டு அழைத்து வரப்படுவார் மணமகள். இந்த மரபின் படி, மருதாணி நிகழ்ச்சிக்கு பிறகு, திருமண நாள் வரை மணப்பெண் வீட்டை விட்டு வெளியேற கூடாது.

மருதானியின் நிறம் மருதானியின் நிறம் எந்தளவிற்கு கருமையாகவும் ஆழமாகவும் மணப்பெண்ணின் கைகளில் பதிந்திருக்கிறதோ அந்தளவிற்கு அவரிடம் அவருடைய கணவரும், மாமனாரும் மாமியாரும் அன்பை பொழிவார்கள் என நம்பப்படுகிறது.

நல்ல சகுனம் மருதாணி சடங்கு திருமணத்தில் உள்ள காதலின் வலுவையும் சக்தியையும் எடுத்துக்காட்டும். அதனால் மணமகளுக்கு இதனை ஒரு நல்ல சகுனமாக கருதுகின்றனர். மணப்பெண்ணின் கைகளில் மருதாணி எந்தளவிற்கு நீடித்து நிலைக்கிறதோ அந்தளவிற்கு அவருடைய வருங்காலம் மங்களகரமாக அமையும்.


busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :