திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு என்பார்கள். ஆயிரம் தடவை போய் வந்து திருமணம் செய்யலாம் என்ற பழமொழி தான் ஆயிரம் பொய் சொல்லி என்று காலப்போக்கில் மாறிவிட்டது.
ஆயிரம் தடவை போய் வருவதைவிட, சில விஷங்கள் மற்றும் கேள்விகளை தெள்ளத்தெளிவாக கேட்டு, நல்ல புரிதலோடு இல்வாழ்க்கையை தொடங்குவதே, மணம் முடிக்க போகும் இருவருக்கும் உகந்தது ஆகும்.
கட்டங்கள் நன்றாக இருக்கிறதா என்பதைவிட, இருவரது மனநிலையும் ஒரே பாதையில் செல்ல தகுந்தவண்ணம் இருக்கிறதா என்பது தான் இந்த கால நிலைக்கு சரியானதாக இருக்கும். முன்பு போல, ஆண், பெண் என வேலைகளில் பிரிந்து செய்யும் வழக்கம் மறைந்து, இருவரும் எல்லா வேலைகளிலும் பங்கெடுத்து செய்யும் வழக்கம் பிறந்துள்ளது.
இந்த சூழ்நிலைக்கு ஏற்ப திருமணம் செய்யும் இளைஞர்கள் குறைந்தது இந்த கேள்விகளுக்காவது பதில் தெரிந்துக்கொண்டு இல்வாழ்க்கையை தொடங்கினால் அது நல்லறமாகவும், மகிழ்ச்சி நிறைந்த பூவனமாகவும் இருக்கும்.....
குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதமா? இதுவெல்லாமா என்று சிலர் யோசிக்கலாம், ஆனால் இன்றைய இளம் பெண்கள் திருமணம் ஆன உடனே குழந்தைகள் பெற்றுக்கொள்ள அதிகம் விரும்புவதில்லை. இந்த எண்ணம் சில சமயங்களில் குடும்பத்தினுள் சண்டை சச்சரவுகள் ஏற்பட காரணமாகிவிடும்.
குடும்ப பொருளாதார நிலை உங்களது குடும்பத்தின் உண்மையான பொருளாதார நிலை குறித்து பேசி, வரவு, செலவுகள் பற்றி முடிவு செய்துக்கொள்ள வேண்டியது. பகட்டுக்காக பொய் சொல்லிவிட்டு பிறகு திருமணம் செய்த பிறகு உண்மை தெரிய வருவது சிக்கல்கள் ஏற்படுத்திவிடும்.
மற்றும் முன்னரே இதை பற்றி பேசுவது, திருமணத்திற்கு பிறகு பெண்ணும் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கான வேலைகளை முன்னரே முடிவு செய்துக்கொள்ள உதவும்.
படிப்பும் முதிர்ச்சியும் இன்றைய ஹைஃபை வாழ்க்கை முறையில் அனைவரும் நவ நாகரீகமாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றார் போல், ஆண் பெண் இருவரும் தங்களது துணை நன்கு படித்தவராகவும், சமூகத்தில் முதிர்ச்சியான அறிவு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுபவராக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.எனவே, திருமணத்திற்கு முன்பே இதை பற்றி தெளிவாக பேசி முடிவு செய்துக்கொள்வது பின்னாளில் உங்கள் இருவருக்குள் , மன கசப்புகள் ஏற்படாமல் இருக்க உதவும்.
கொள்கைகள் மற்றும் ஈடுபாடு திருமணத்திற்கு முன்னரே உங்களது கொள்கைகள் மற்றும் ஈடுபாடுகள் என்னென்ன என கூறி ஓர் புரிதல் ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்.
ஒருவருக்கு சாமி கும்பிட பிடிக்கும், ஒருவருக்கு பிடிக்காமல் போகலாம். சாப்பிடுவதில் இருந்து, உங்களுக்கு பிடித்த விஷயங்கள் வரை முன்னரே தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வாழ்வியல் முறை ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் இருப்பது போல, அவரவர் விரும்பும்படி வாழவும் உரிமை இருக்கிறது. எனவே, உங்களது வாழ்வியல் முறை அவருக்கு ஒத்துவருமா என கேட்டுக்கொள்வது நல்லது.
இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் பார்டிகளுக்கு செல்ல ஆரம்பித்தவிட்டாலும் கூட, இன்னமும் ஆச்சாரம், சம்பிரதாயம் என வாழ்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, நீங்கள் உங்கள் வாழ்வியல் முறையோடு அந்த பெண்ணால் ஒத்துழைப்புக் கொடுத்து வாழ முடியுமா என அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
குடும்ப பழக்கவழக்கங்கள் நம் நாட்டில் தான், மாநிலம், ஊர், ஜாதி, மதம், குடும்பம் என பல வகைகள் மற்றும் தனி தனி, வழக்கங்கள் என பல இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல வாழ முடியுமா என முன்பே அறிந்துக்கொள்ளுங்கள்.
மணமக்களுக்காக இல்லாவிட்டாலும், பெற்றோர் விடமாட்டார்கள். எனவே, மாமியார், மருமகள் சண்டை வராமல் இருப்பதற்காகவாவது இதை முன்கூட்டியே சொல்லிவிட வேண்டியது அவசியம்.
விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை திருமண வாழ்வில் மணமக்கள் இருவருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை. இருவரில் யாராவது ஒருவராவது விட்டுக்கொடுத்து போக வேண்டும்.
ஒளிவுமறைவு இன்றி நீங்கள் திருமணம் செய்துக் கொள்ள போகிறீர்கள் என நிச்சயம் ஆகிவிட்டால். அதற்கு முன்பே உங்கள் இருவரை பற்றி ஒளிவுமறைவு இன்றி ஒருவரை ஒருவர் முழுதாக மனம்விட்டுப் பேசி புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உங்களது மறுபக்கத்தையும் கூறிட வேண்டும் சின்ன சின்ன தீயப் பழக்கமாக இருந்தாலும் கூட, அவற்றை அவர்களிடம் கூறி. தான் இப்படி என்பதை கூறிவிடுவது நல்லது. இவை எல்லாம் காதல் திருமணங்களில் கூற தேவை இல்லை. அவர்களே தெரிந்து வைத்திருப்பார்கள்.
ஆனால், நிச்சயம் செய்து திருமணத்தில் இதற்கான வாய்ப்புகள் குறைவு, எனவே கூறி விடுங்கள். மற்றும் இது உங்கள் மீது ஓர் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.