சென்னை: நான் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றும், திமிரும், கொழுப்பும் அதிகம் உண்டு என்றும் கூறிய குஷ்பு, தாலி அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை, அதில் சமூகம் எதையும் சொல்லக்கூடாது என்றும் தடாலடியாக பேசினார். சென்னை பெரியார் திடலில், பெரியார் பிறந்தநாளையொட்டி, ‘யுனெஸ்கோ' பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் ‘மகளிர் கருத்தரங்கம்' திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்றது.
பெரும் சாதனை கருத்தரங்கை அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நான் மும்பையில் இருந்து இங்கு தமிழ்நாடு வந்ததில் இருந்து முதல் முறையாக மிக பெரியளவில் சந்தோசமா இருக்கேன் என்றால் அது இங்கு பெரியார் திடலில் தந்தை பெரியார் பிறந்தநாளில் பேசும் இந்த நிகழ்சிக்காக தான்.
கடவுள் ஒரு கற்பனை 29 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 13ம் தேதி சென்னை வந்தேன். 29 ஆண்டுகளை திரும்பி பார்க்கும் போது பேர், பணம், புகழ் வரும் போகும் என்று தெரிந்தது. சாதித்தது என்ன? என்று திரும்பி பார்க்கும் போது பெரியார் திடலில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாவில் இன்று பேசுவதை தான் பெரும் சாதனையாக நினைக்கிறேன். கடவுள் இருக்கிறாரா? தெரியாது. ஆனால் கற்பனைகளால் உருவாக்கப்பட்ட ஒருவரை கை எடுத்து கும்பிட முடியாது. நம்முடைய ஆறாவது அறிவு என்ன சொல்லுதோ அதை தான் செய்ய வேண்டும்.
தாலி கட்டாதது சுதந்திரம் மதம் மனிதனை மிருகமாக்கும் என்றார் பெரியார். சாதி ஒழிக்க வந்த புரட்சி விதை பெரியார். தாலி கட்டுவதும் கட்டாமல் விடுவதும் அவரவர் சுதந்திரம். இதை தான் செய்யனும், இதை தான் சிந்திக்கணும் என எதையும் திணிக்க கூடாது. இதெல்லாம் பெரியார் பற்றி படிக்கும்போது தான் அறிந்துகொண்டேன். கி.வீரமணி, பேசும்போது ‘படிக்காதவர்களுக்கு தான் துணிச்சல் அதிகம்' என்றார். நான் படிக்காதவள் தான். அதனால்தான் எனக்கு துணிச்சல் இருக்கு போல. கொஞ்சம் திமிரும், கொழுப்பும் இருக்கு.
ரஹ்மானுக்கு பத்வா பெண்கள் எந்த கருத்தையும் வெளியே பேசுவதற்கே தயங்கும்போது துணிஞ்சு வந்து பேச ஒரு திமிர் வேணும். அது எனக்கு இருக்கு. அது பெரியார்கிட்ட இருந்து வந்தது. இன்று ஏ.ஆர் ரகுமானுக்கு பத்வா கொடுக்கிறார்கள். அப்படி செய்ய நீங்க யார்? உங்களுக்கு பயந்து நாங்கள் பேச வேண்டுமா? எனக்கு ஆறாவது அறிவு இருக்கு. உண்மையை பேசக்கூடிய தைரியமிருக்கு. கடவுளுக்கு அது இதுன்னு கொடுக்குறீங்களே அது என்ன கமிசனா? இதுல கடவுள்கிட்ட பேச இடையில ஒரு தூதர் வேற. கடவுள் தூதர் பேர்ல தான் பல மோசடி நடக்குது.
குரான் படிக்க சொல்லவில்லை ஒருவகையில சின்ன வயசுலையே நான் பெரியாரிஸ்ட் தான். இது என் அம்மா மூலம் வந்துருக்கலாம். என்னை எப்போதும் முஸ்லீம் என்றோ, குரான் படி, நமாஸ் செய் என்றோ சொன்னதே இல்லை. உன் வாழ்க்கைக்கு எது சரின்னு படுதோ அதை நீ முடிவு பண்ணு என்று தான் வளர்த்தார். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் இன்று பெரியாரை வந்து நான் சேர்ந்ததற்கு.
வாரியாடி என கூப்பிடுவதில்லை சுயமரியாதையோடு இன்று பெண்கள் இருக்க காரணம் பெரியார் தான். பெண்களை பார்த்தால் ‘வரியாடி' என்று கூப்பிடுறதில்லை. கை எடுத்து மரியாதை செலுத்துவது அந்த மரியாதையை சொல்லி தந்தவர் பெரியார். கீழ் சாதியினர் என சொல்லபடுபவர்களை பொது தெருவில் கூட்டி சென்றவர் பெரியார். சுயமரியாதையை பெற்று தர போராடியவர் பெரியார்.
கணவர் என் வீட்டில் என் கணவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர். நான் பெரியாரிஸ்ட். ஆனால் எதையும் என்னிடம் திணித்ததில்லை. இப்படி இருக்க வேண்டும் என பெண்களுக்கு சமவுரிமை தரனும் என என் கணவருக்கே சொல்லி தந்தவர் பெரியார்தான். ஆக பெரியார் திடலில் பெரியார் பிறந்தநாளில் எனக்கு பேச வாய்ப்பு வந்தது எனக்கான மிகபெரிய மரியாதையாக கருதுகிறன்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/congress-party-spoke-person-kushboo-said-she-is-an-atheist-235864.html#slide169622