ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிடும் வீடியோவைப் பார்த்து, 15 வயது பெண் தன் தாயை குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
டைன் ரோமர் ஹோல்ட்கார்ட் என்ற ஓவியர் தன் கணவன் மற்றும் தன் இரண்டு மகள்களுடன் டென்மார்க்கில் வசித்து வருகிறார். அதில் ஒருவர் லிசா போர்ச். சென்ற வருடம் அக்டோபர் மாதம், லிசா போர்ச், தன் தாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதால், உதவிக்கு வருமாறு போலிசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு விரைந்த போலிசார் அவரின் தாய் படுக்கையறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் போர்ச் கூறுகையில், தன் தாய் அலறும் சத்தத்தை தான் கேட்டதாகவும், அங்கிருந்து ஒருவன் தப்பி ஓடினான் என்றும் தெரிவித்தார்.
போர்ச்சின் மீது சந்தேகம் கொண்ட போலிசார், அவளின் கம்ப்யூட்டரை பரிசோதித்துப் பார்த்ததில், அவள் அந்த சம்பவம் நடப்பதறகு முன்பு நெடுநேரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்புடைய வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
விசாரனையில், ஈராக்கில் இருந்து அகதியாக வந்து, அவளின் வீட்டின் அருகே உள்ள அகதி முகாவில் இருக்கும் அப்துல்லா என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவன் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் இருவரும் ஈராக்கிற்குச் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போரில் ஈடுபடவும் முடிவு செய்திருந்தாக தெரிகிறது.
இதை அறிந்த போர்ச்சின் தாய், தன் மகளுடன் அடிக்கடி சண்டை போட்டதாக தெரிகிறது. பெரும்பாலுமான சண்டைக்கு போர்ச், அப்துல்லாவுடன் வைத்திருந்த நட்பே காரணம் எனத் தெரிகிறது. இதன் அடிப்படையிலேயே கொலை நடந்திருக்கலாம் என போலிசார் விசாரனை நடத்தினர். மேலும் போர்ச்சின் தாயின் படுக்கையறையில், அவரது காதலன் அப்துல்லாவின் கைரேகை இருப்பதை கண்டறிந்த போலிசார் இருவரும் சேர்ந்து போர்ச்சின் தாயை கொன்றுள்ளதாக முடிவுக்கு வந்தார்கள்.
இருவரும் கொலையாளிகள் என நிரூபிக்கப்பட்டு, போர்ச்சுக்கு 9 வருடமும், அவளின் காதலனுக்கு 13 வருடமும், நீதிமன்றத்தில் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.