விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் தங்களின் வீடுகளில் விநாயகர் சிலைகளை வாங்கி, விநாயகருக்கு பிடித்த பலகாரங்களான கொழுக்கட்டை, லட்டு, எள்ளுருண்டை போன்றவற்றை சமைத்து, விநாயகருக்கு படைத்து பூஜைகளை செய்து வருவார்கள்.
விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்? விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பல வித்தியாசமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வெளிவரும். அந்த வகையில் இந்த வருடமும் பல வித்தியாசமான விநாயகர் சிலைகள் வெளிவந்துள்ளன.
விநாயகரின் தோற்றம் குறித்த கதைகள்!!! இங்கு 2015 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வெளிவந்திருக்கும் சில வித்தியாசமான விநாயகர் சிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்பைடர் மேன் விநாயகர் இந்த வருடம் ஸ்பைடர் மேன் விநாயகர் சிலை வந்துள்ளது. இந்த விநாயகர் சிலை குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும்.
கப்பர் சிங் விநாயகர் கப்பர் சிங் திரைப்படமானது 2012 ஆம் ஆண்டு வெளிவந்தாலும், இன்னும் இது ட்ரெண்ட்டாக உள்ளது என்பதை கப்பர் சிங் விநாயகர் மூலம் அறியலாம்.
அன்னா ஹசாரே விநாயகர் இந்த வருடம் அன்னா ஹசாரே விநாயகரும் மார்கெட்டில் வந்துள்ளது.
கிரிக்கெட் விநாயகர் 2015 உலக கோப்பைக்கு பின், இந்த வகையான விநாயகர் மிகவும் பிரபலமானார். மேலும் இந்த வருடம் இந்த கிரிக்கெட் விநாயகர் கிரிக்கெட் பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டு மார்கெட்டில் வெளிவந்துள்ளது.
உப்பி-2 விநாயகர் நடிகர் உபேந்திராவின் தீவிர ரசிகர்களுக்காக, இந்த வருடம் வித்தியாசமாக உப்பி விநாயகர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செல்ஃபீ விநாயகர் தற்போது எங்கு பார்த்தாலும் செல்ஃபீ எடுப்பது மிகவும் பிரபலமாக உள்ளதால், இந்த வருடம் நம் விநாயகரே தன் குடும்பமான சிவன், பார்வதி, முருகன் மற்றும் நந்தியுடன் சேர்ந்து செல்ஃபீ எடுத்தவாறான விநாயகர் சிலை வெளிவந்துள்ளது.
பாகுபலி விநாயகர் இந்த வருடம் வெளிவந்த மிகவும் பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படம் பல மக்களின் கவனத்தை ஈர்த்து, பல கோடி வசூல் சாதனை புரிந்ததையடுத்து, இப்படத்தின் தீவிர ரசிகர்களுக்காக பாகுபலி விநாயகர் வடிவமைக்கப்பட்டு மார்கெட்டில் வெளிவந்துள்ளது.