நாசிக் நகரில் நடந்து வரும் கும்ப மேளாவில் 24 வயதான ஒரு இளம் காவலர் ஒரு மனிதனின் உயிரை காப்பாற்ற 20 அடி உயரமான பாலம் ஒன்றிலிருந்து தண்ணீரில் குதித்து அந்த உயிரை காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
மனோஜ் பரகடே என்னும் இந்த இளம் காவலர் நாசிக் நகரில் நடந்து வரும் கும்ப மேளாவில் பாதுகாப்புக்கு போடப்பட்ட காவலர்களில் ஒருவர், இவர் 20 அடி உயரமான பாலத்திலிருந்து தண்ணீரில் குத்தித்து உயிருக்கு போராடிய ஒருவரின் உயிரை காப்பாற்றி எந்த வித ஆரவாரமும் இல்லாமல் இருக்கிறார்.
24 வயதான அந்த காவலர் நேற்று அமர்தம் பாலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு மனிதர் பாலத்திலிருந்து தண்ணீரில் குதித்ததை பார்த்துள்ளார். மனோஜ் மற்றும் அவருடன் பணியில் இருந்த பிற காவலர்கள் அவரை தடுத்தும் அவர் குத்தித்துள்ளார், இதனால் அவரின் உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சற்றும் யோசிக்காமல் மனோஜ் 20 அடி உயரத்திலிருந்து குதித்து அவரை காப்பாற்றியுள்ளார்.
பயிற்சி காவலரான மனோஜ் பின்னர் கூறுகையில், அவர் தண்ணீரில் குதித்த பிறகு அவரிடம் இருந்து எந்த அசைவும் தெரியவில்லை, மேலும் அவரை காப்பாற்றுவதற்கு இதை தவி வேறு வழி இல்லை என்று தோன்றியது. அதனால் குதித்துவிட்டேன் என்று அவர் கூறினார்.
ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ஆணையர் பிரவீன் கேடம் டிவிட்டரில் மனோஜின் படத்தை போட்டு இளம் காவலரின் துணிச்சல், அவருக்கு சல்யூட் என பாராட்டியுள்ளார்.