Showing posts with label health. Show all posts
Showing posts with label health. Show all posts

Saturday, 19 September 2015

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் உணவுகள்!!!

By     No comments:


வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உங்களை வேகமாக நடமாட முடியாமல் தடுக்கிறதா? ஆம் என்பது தான் பெரும்பாலானவர்களின் பதில். வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது தான் தற்போதைய ஆண்களின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது. ஆனால், நீங்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் வேகமாக உங்கள் வயிற்றில் தேங்கியிருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்பை கரைக்க முடியும். இதனால், உங்கள் உடல் எடை குறைவது மட்டுமின்றி, குடலியக்கம் சீராகும், செரிமானம் சரியாகும்....

பப்பாளி பழம் கொழுப்பை கரைக்க உதவுவதில் ஓர் சிறந்த பழம் பப்பாளி. இதில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. உங்கள் டயட்டில் பப்பாளியை சேர்ப்பதால் விரைவாக கொழுப்பை குறைத்து, உடல் எடையில் நல்ல மாற்றம் காண முடியும்.

தக்காளி கொழுப்பை எதிர்த்து போராடும் பழம் எனும் பெயர் பெற்றது தக்காளி. சரியான அளவு உங்கள் டயட்டில் தக்காளியை சேர்த்துக் கொள்வதால் தொப்பையை குறைக்க முடியும். இது அதிகப்படியான சோடியம், தண்ணீர், கொழுப்பை நீக்க உதவுகிறது.

காளான் குடலியக்கத்தை சரியாக்கி, சீரான முறையில் இயங்க வைத்து, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது காளான். இது, வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க பெருமளவில் உதவுகிறது.

ஓட்ஸ் வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுவதில் ஓட்ஸ் ஓர் சிறந்த உணவாக இருக்கிறது. உங்களது காலை உணவில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள், இதில் இருக்கும் நார்சத்து உடல் எடையை குறைக்கவும், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கவும் உதவுகிறது.

வாழைப்பழம் வாழைப்பழம் உங்கள் செரிமனாத்தை வேகமடைய வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க முடியுமாம்.

திராட்சை திராட்சை உங்கள் பசியை குறைக்கும் மற்றுமொரு சிறந்த உணவாகும். திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக குறைக்க முடியும். தொடர்ந்து நீங்கள் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் 10 நாட்களில் 10 பவுண்ட் எடை வரை குறைக்க முடியுமாம்.

கர்ப்பிணி பெண்கள் காதில் விழக் கூடாத வார்த்தைகள்!!!

By     No comments:

ருவறையில் வளரும் போதே சிசு வெளியில் இருப்பவர் பேசுவதை உள்வாங்க ஆரம்பித்து விடுகிறது. மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மனநிலை கருவில் வளரும் சிசுவை பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்திலும் சரி, கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் நேரடியாகவும் சரி சில வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இது அவர்களை மனதளவில் பாதிப்படைய வைக்கலாம்...

கேள்வி 1 பிரசவிக்கும் போது வலி அதிகம் ஏற்படும், நீ தாங்கிக் கொள்வாயா? என்பது போல கர்ப்பிணி முன்பு பேசவே கூடாது. இது அவர்களை மனதளவில் பெரிதாய் பாதிக்கும்.

கேள்வி 2 ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதிரி வயிறு வெளியே தெரியும். அதற்காக வயிறு மிகவும் சிறியதாய் இருப்பது போல தெரிகிறது, மருத்துவரிடம், குழந்தை ஆரோக்கியமாக தான் இருக்கிறதா என கேளு. என்பது போல பேச வேண்டாம். மாதா மாதம் பரிசோதிக்கும் மருத்துவர் அதை கூறிக் கொள்வர். நீங்கள பயமுறுத்த வேண்டாம்.

கேள்வி 3 முடியாது, கடினம், தோல்வி, நஷ்டம் என்பது போல எப்போதும் கர்ப்பிணி முன்பு பேச வேண்டாம். கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறான வார்த்தைகளை மட்டுமே கேட்கும் போது அதன் குணாதிசயங்கள் மாறுபட வாய்ப்பிருக்கிறது.

கேள்வி 4 வயிறு பெரிதாய் இருந்தால் ஆண், இல்லையென்றால் பெண் என நீங்களாக எதையும் கொளுத்தி போட வேண்டாம். இதுப் போன்ற ஆசைகள் அதிகரித்து, பிறகு வேறு குழந்தை பிறக்கும் போது மனதளவில் பெண் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன.

கேள்வி 5 சாப்பாடு விஷயத்துல ரொம்ப கஷ்டமா இருக்கா, பரவலா கொஞ்ச நாள் தான் என கூறி, அவர்களது ஏக்கத்தை அதிகரிக்க வேண்டாம். இதுவும் கர்ப்பிணி பெண்களின் மனதை பாதிக்கவல்லது.

பலருக்கும் தெரியாத ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள்!!!

By     No comments:

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள். அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், உடை, தலைமுடி, நடை என்று கூறுவார்கள். இவை அனைத்தும் நம் கண்களுக்கு புலப்படும் வெளிப்படையான வேறுபாடுகள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உளவியல் ரீதியான வேறுபாடுகள்!!! ஆனால் அதையும் தாண்டி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உடல் வித்தியாசங்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் போல்ட்ஸ்கை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொழுப்பு சேரும் இடம் பொதுவாக ஆண்களுக்கு கொழுப்புக்களானது வயிற்றில் சேரும். அதனால் தான் பெண்களை விட ஆண்கள் தொப்பையால் கஷ்டப்படுகின்றனர். அப்படியெனில் பெண்களுக்கு கொழுப்புக்கள் எங்கு சேரும் என்று கேட்கலாம். பெண்களுக்கு கொழுப்புக்களானது தொடை மற்றும் இடுப்பின் பின்பகுதியில் சேரும். மேலும் ஆண்களை விட பெண்களின் தொடை பெரியதாக இருப்பதற்கு காரணமும் இதுவே.

இதய துடிப்பு இதய துடிப்பு என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் இதய துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். அதில் ஆண்களுக்கு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறதெனில், பெண்களுக்கு 80 முறை துடிக்கும்.

செல்கள் வேறுபடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள செல்களும் வேறுபடும். இதற்கு காரணம் அவர்களின் குரோமோசோம்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரத்த சிவப்பணுக்கள் ஆண்களை விட பெண்களின் ரத்தத்தில் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் பெண்களின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும். இதன் காரணமாக பெண்கள் அடிக்கடி இரத்த சோகைக்கு உள்ளாகின்றனர்.

நுரையீரல் ஆண்களை விட பெண்களின் நுரையீரல் சிறிதாக இருக்கும். அதில் ஆண்களின் நுரையீரலானது பெண்களின் நுரையீரலை விட 30 சதவீதம் பெரியதாக இருக்கும். இதனால் தான் ஆண்களை விட பெண்கள் எதிலும் விரைவில் சோர்வடைகின்றனர்.

தலை, தண்டுவடம், கால்கள் அதேப் போல் பெண்களை விட ஆண்களின் தலை, தண்டுவடம் மற்றும் கால்கள் போன்றவை பெரியதாக இருக்கும்.

வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால் வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால் ஆகிய மூன்றும் பெண்களை விட ஆண்களுக்கு சிறிதாக இருக்கும்.

பற்கள் பற்கள் என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் பற்கள் வலிமை குறைவாக இருக்கும். சொல்லப்போனால் பொக்கை வாய் தாத்தாக்களை விட, பொக்கை வாய் பாட்டிகள் தான் உலகில் அதிகம்.

ஆக்ஸிஜன் அளவு ஆண்களை விட பெண்களின் உடலில் ஆக்ஸிஜன் சற்று குறைவாக இருக்கும். இதற்கு காரணமும் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது தான். சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. அது குறைவாக இருக்கும் போது, பெண்களால் கூட்டம் நிறைந்த இடங்களில் நீண்ட நேரம் இருக்க முடியாமல் மயங்கி விழுகின்றனர்.

ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழங்களை உட்கொண்டால் உயிரை இழக்கக்கூடும்?

By     No comments:

அன்றாடம் இரவில் படுக்கும் முன் பலரும் சாப்பிடும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அத்தகைய வாழைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. அதிலும் பொட்டாசியம் தான் அதிக அளவில் வாழைப்பழத்தில் உள்ளது. இச்சத்து இதயம், ரத்தம், நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். 12 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு நம்ப முடியாத வகையில் மாறிய அதிசய பெண்! ஆனால் ஒரு நாளில் வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உயிரை இழக்கக்கூடும் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது. எனவே பலரும் வாழைப்பழத்தை சாப்பிட பயன்படுகின்றனர். அதிலும் ஒரு நாளைக்கு 6 வாழைப்பழத்தை உட்கொள்ளலாம், 7 ஆவது பழத்தை உட்கொண்டால், உயிரை இழக்கக்கூடும் என்று நம்புகின்றனர். ஆனால் இது குறித்து சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது. அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

400 வாழைப்பழம் உயிரைக் குடிக்கும் அளவில் எனில் சுமார் 400 வாழைப்பழங்களை ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டாலும், அதில் உள்ள முழு பொட்டாசியமும் நேரடியாக சிறுநீரகங்களைத் தாக்கினால் மட்டுமே உயிரிழக்கக்கூடும்.

குடல் தடுக்கும் ஆனால், வாழைப்பழத்தை சாப்பிடும் போது, பாதி வழியிலேயே பாதி பொட்டாசியத்தை குடல் உறிஞ்சிவிடும். எஞ்சிய பொட்டாசியம் தான் சிறுநீரகங்களுக்குச் செல்லும். எனவே 400 பழங்களை ஒரே நேரத்தில் உட்கொண்டாலும் மரணம் ஏற்படப் போவதில்லை என்று லண்டனில் இருக்கும் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த காத்தரின் கொலின்ஸ் என்னும் உணவுமுறை நிபுணர் கூறியுள்ளார்.

கதிரியக்க விஷம் வாழைப்பழத்தைக் குறித்து மற்றொரு மூடநம்பிக்கை மக்களிடையே உள்ளது. அது என்னவெனில், வாழைப்பழத்தால் கதிரியக்க விஷம் பரவுகிறது என்பது தான்.

கதிரியக்க விஷம் குறித்து கேத்தரின் கூறுவது... ஒவ்வொருவரின் உடலிலும் கதிரியக்கம் உள்ளது என்று கூறுவதோடு, வாழைப்பழத்தினால் கதிரியக்க விஷம் பரவுவதற்கு ஒருவர் ஒரு வேளைக்கு 10 லட்சம் வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கிறார்.

ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள் அதுமட்டுமின்றி, கேத்தரின் ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள் வீதம் தொடர்ந்து ஏழு வருடங்கள் உட்கொண்டு வந்தால் தான், உடலில் கதிரியக்க விஷம் ஏற்பட்டுள்ள அறிகுறிகளே தென்படும் என்கிறார். எனவே, எவ்வித பயமும் இல்லாமல் ஒரு நாளைக்கு எவ்வளவு வாழைப்பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.

முளைக்கட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? கூடாதா?

By     No comments:

பலருக்கும் மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு பிரியர்கள், அதனை எப்படி சமைத்தாலும் சாப்பிட்டுவிடுவார்கள். இத்தகையவர்கள் வீட்டில் எப்போதுமே உருளைக்கிழங்கு இருக்கும். ஆனால் அப்படி மொத்தமாக வீட்டில் வாங்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளைக்கட்டினால், அதை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று தெரியாது. 10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க! இது குறித்து அகமதாபாத்தை சேர்ந்த உணவுமுறை மற்றும் ஊட்டச்ச்சத்து நிபுணர் டாக்டர், ஸ்வாதி விளக்கம் அளித்துள்ளார். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சர்க்கரை அளவு உயர்வு முளைக்கட்டிய உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் நன்கு முற்றிய உருளைக்கிழங்கு மென்மையாக இருப்பதற்கு, அதில் உள்ள கார்போஹைட்ரேட் சர்க்கரையாக மாற்றமடைந்திருப்பது தான்.

பச்சை உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் தோல் பச்சையாக இருந்தாலும், அதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் அந்த அல்கலாய்டுகள் இருக்கும். ஒருவேளை நீங்கள் வாங்கிய உருளைக்கிழங்கில் பச்சை நிறத்தோல் இருந்தால், அப்பகுதியை நீக்கிவிடுங்கள்.
ஆய்வு முடிவு பொதுவாக முளைக்கட்டியது ஆரோக்கியமானது என்ற கருத்து இருப்பதால், இதுக்குறித்து ஆய்வு ஒன்றில் பரிசோதிக்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் முளைக்கட்டிய உருளைக்கிழங்கின் தோல் நன்கு பிரஷ்ஷாக இருந்தால், அதில் உள்ள முளைக்கட்டியதை மட்டும் நீக்கிவிட்டு சாப்பிடலாம் என்று தெரியவந்துள்ளது. ஏனெனில் வலிமையுடன் இருக்கும் உருளைக்கிழங்கில் ஊட்டச்சத்துக்ள் அப்படியே இருக்குமாம். ஆனால் அதுவே சுருங்கிவிட்டால், அதன் முழுச்சத்துக்கள் நீக்கிவிடுவதால், அதனை தூக்கி எறிந்துவிட வேண்டுமாம்.

உருளைக்கிழங்கு முளைக்கட்டாமல் இருக்க சில டிப்ஸ்... * உருளைக்கிழங்கில் 78% நீர்ச்சத்து இருந்நதால், இது 5-7 மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஆனால் அதனை குளிர்ச்சியான, கருமையான மற்றும் காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். * உருளைக்கிழங்கை ஈரப்பதமிக்க இடத்தில் வைத்து பராமரித்தால், முளைக்கட்டுவதோடு, விரைவில் கெட்டுப் போகவும் கூடும்.

குறிப்பு ஏன் உருளைக்கிழங்கை மொத்தமாக வாங்கி முளைக்கட்டும் வரை வீட்டில் வைக்கிறீர்கள்? அதை கொஞ்சமாக வாங்கி, அவ்வப்போதே சமைத்து சாப்பிட்டால், எதற்கு இப்பிரச்சனையெல்லாம் வரப்போகிறது. எனவே பிரஷ்ஷாக வாங்கி, சமைத்து சாப்பிட்டு, அதன் முழுப்பலனையும் பெறுங்கள்.

உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

By     No comments:

உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் ஒன்று தான் இரும்புச்சத்து. இந்த இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தால், அதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் பலரும் பெண்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர். இரத்த வகைகளும்... அதற்கான சரியான டயட்டும்... சரி, இரும்புச்சத்து ஏன் இன்றியமையாதது என்று தெரியுமா? பொதுவாக இது ஹீமோகுளோபினின் முக்கியமான பகுதி.
அதுமட்டுமின்றி, இதுதான் நுரையீரல் மற்றும் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது. இதில் குறைபாடு ஏற்பட்டால், உடல் செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்படும். இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள்!!! சரி, இப்போது உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
மூச்சுவிடுவதில் சிரமம் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், ஒன்று நுரையீரல் பிரச்சனையாக இருக்கும் அல்லது இரும்புச்சத்து குறைபாடாக இருக்கும்.

அதிகப்படியான இரத்தப்போக்கு மாதவிடாய் காலத்தில் இரத்தப் போக்கு அளவுக்கு அதிகம் ஏற்பட்டால், அதற்கு காரணமும் இரும்புச்சத்து குறைபாடு தான். எனவே மாதவிடாய் காலத்தில் எண்ண முடியாத அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை சந்தியுங்கள்.

வெளிரிய சருமம் கன்னங்கள், உதட்டின் உள்ளே மற்றும் கண் இமைகளுக்கு அடிப்பகுதியில் உங்கள் சருமம் வெளிரிப் போயிருந்தால், மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஏனெனில் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் தான் அவை.
ஐஸ், சாக்பீஸ், களிமண் போன்றவை சில குழந்தைகள் சாக்பீஸ், பேப்பர் அல்லது களிமண் சாப்பிடுவதை கண்டிருப்பீர்கள். இதற்கு காரணம் இரும்புச்சத்து குறைபாடு தான். இக்குறைபாட்டினால் தான் இப்பழக்கங்களைப் பின்பற்ற நேரிடுகிறது. இது நம்பமுடியாதவாறு இருந்தாலும், அது தான் உண்மை.
தலைவலி நீங்கள் கடுமையான தலைவலியை பல நாட்களாக உணர்ந்து வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டினால் உங்கள் மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை என்று அர்த்தம். எனவே நீங்கள் அடிக்கடி தலைவலியால் கஷ்டப்பட்டால், மருத்துவரை உடனே சந்தியுங்கள்.

பதற்றம் பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படக்கூடும். ஆனால் பதற்றமானது நரம்புகளினால் ஏற்படுவது. நீங்கள் சமீப காலமாக அதிகமாக பதற்றமடைந்தால், உங்களின் இரும்புச்சத்தின் அளவை பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் உங்கள் இதயம் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததால், வேகமாக துடித்து, அதனால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பதற்றம் ஏற்படுகிறது.

முடி உதிர்தல் முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், இரும்புச்சத்து குறைபாடும் ஓர் முக்கிய காரணமாகும். நீங்கள் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருதுந்தால், உங்கள் முடி அதிகமாக உதிர்வதை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி, இது நீடித்தால், நாளடைவில் வழுக்கைத் தலை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஹைப்போ தைராய்டு உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்பட்டு, அதனால் ஹைப்போ தைராய்டு ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.